குல்பூஷண் ஜாதவ் விடுதலை ஆவாரா?

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான குல்பூஷண் ஜாதவ், தன் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உரிமை அளிக்கும் மசோதா, பாக்., பார்லிமென்ட்டில் நேற்று நிறைவேறியது. மறு பரிசீலனை இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், 51, கடந்த 2016ல், பாக்., ஆக்கிரமிப்பு பகுதி களில் ஒன்றான, பலுசிஸ்தானில்,
குல்பூஷண் ஜாதவ் விடுதலை ஆவாரா?

இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான குல்பூஷண் ஜாதவ், தன் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உரிமை அளிக்கும் மசோதா, பாக்., பார்லிமென்ட்டில் நேற்று நிறைவேறியது.


மறு பரிசீலனை


இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், 51, கடந்த 2016ல், பாக்., ஆக்கிரமிப்பு பகுதி களில் ஒன்றான, பலுசிஸ்தானில், அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.இவர், பாக்., உள்ளே புகுந்து இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக, அந்நாட்டு ராணுவம் குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கில், குல்பூஷண் ஜாதவுக்கு துாக்கு தண்டனை விதித்து, பாக்., ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil news



கடந்த 2019ல், துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள, சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு அணுகியது.அப்போது, 'ராணுவ நீதிமன்றம் வழங்கிய துாக்கு தண்டனையை எதிர்த்து, குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய உரிமை வழங்கப்பட வேண்டும். 'எனவே, உத்தரவை மறு ஆய்வு மற்றும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல்வேறு விதமான தாமதங்களுக்கு பின், சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த, மறு ஆய்வு மற்றும் மறு பரிசீலனை உத்தரவை ஏற்று, பாக்., பார்லிமென்ட்டில் நேற்று மசோதா நிறைவேறியது.


வாய்ப்பு



எதிர்க்கட்சியினரின் கடும் கண்டனங்களுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, ராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட துாக்கு தண்டனையை எதிர்த்து, பாக்., உயர் நீதிமன்றங்களில், குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு கிடைத்து உள்ளது.இது, அவரது விடுதலையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
12-ஜூன்-202115:07:09 IST Report Abuse
r.sundaram மத்திய அரசு உலக அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இவரின் விடுதலைக்காக. எவ்வாறு அபிநந்தன் விடுவிக்க பட்டாரோ அதே மாதிரி இவரும் திரும்பி வர வேண்டும்.
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
12-ஜூன்-202114:10:18 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN அவர் சீக்கிரம் விடுதலையாக நாம் அனைவரும் பிராத்திப்போம். மத்திய அரசின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
12-ஜூன்-202106:06:14 IST Report Abuse
 N.Purushothaman மத்திய அரசின் சட்ட போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
12-ஜூன்-202115:40:00 IST Report Abuse
Srinivas....மத்திய அரசின் சட்ட போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்/// என்னமா பீசபிக்கு ஊளையிடுகிறான்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X