மாவட்ட பெண் போலீசாருக்கு ரோந்து வாகனம், லேப்டாப்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பெண் போலீசாருக்கு ரோந்து வாகனம், 'லேப்டாப்'

Added : ஜூன் 12, 2021
Share
கோவை:கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 'லேப்டாப்' வழங்கப்பட்டன.அவிநாசி ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நேற்று காலை இந்நிகழ்ச்சி நடந்தது. கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு கூடுதல் எஸ்.பி., சுகாசினி ஆகியோர் 3 இருசக்கர வாகனங்கள் மற்றும், 3 'லேப்டாப்'களை துடியலுார், பேரூர்,

கோவை:கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 'லேப்டாப்' வழங்கப்பட்டன.அவிநாசி ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நேற்று காலை இந்நிகழ்ச்சி நடந்தது. கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு கூடுதல் எஸ்.பி., சுகாசினி ஆகியோர் 3 இருசக்கர வாகனங்கள் மற்றும், 3 'லேப்டாப்'களை துடியலுார், பேரூர், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கினர். தொடர்ந்து புறநகர் ஸ்டேஷன்களுக்கு, 15 இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும், 15 லேப்டாப்கள் வழங்கப்பட்டன.இருசக்கர ரோந்து வாகனம் வழங்கப்பட்ட பெண் போலீசார், போலீஸ் கட்டுப்பாட்டு அறை, 100ல் இருந்து வரும் அவசர அழைப்புகள், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அழைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும்.இந்த வாகனங்கள் மூலம், குறிப்பிட்ட புகார் அளிக்கப்பட்டவர்களின் இடங்களுக்கு சென்று, அங்கிருந்தே 'லேட்பாப்' மூலம் புகார்களை பெற்று உடனடியாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுக்க முடியாத அனைவரும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என, எஸ்.பி., தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X