அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: முதல்வர் உத்தரவு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சேலம்:''நான் செல்லும் பாதையில், மக்களின் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்,'' என, சேலம் வந்த முதல்வர் ஸ்டாலின், போலீசாருக்கு உத்தரவிட்டார்.சேலம், காமலாபுரம் விமான நிலையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார்.இவரது வருகையால், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து,

சேலம்:''நான் செல்லும் பாதையில், மக்களின் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்,'' என, சேலம் வந்த முதல்வர் ஸ்டாலின், போலீசாருக்கு உத்தரவிட்டார்.சேலம், காமலாபுரம் விமான நிலையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார்.இவரது வருகையால், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வரை, ஆங்காங்கே மக்கள், தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். இதனால், ஸ்டாலின் கான்வாய் வாகனங்கள், 20 முதல், 30 கி.மீ., வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. அதேநேரம், ஆங்காங்கே மக்களின் வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். அதை, முதல்வர் பார்த்தார். பின் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., திருநாவுக்கரசிடம், சில நிமிடம் பேசினார்.சில நிமிடங்களில், முதல்வர் பாதுகாப்பு பிரிவில் இருந்து, சேலம் மாநகர போலீஸ் மைக்கில், 'முதல்வர் செல்லும் பாதையில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம். வாகனங்களை வழக்கம்போல் இயங்க அனுமதிக்கவும். முதல்வரின் கார் புறப்படும், 3 நிமிடத்துக்கு முன், சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினால் போதும். முதல்வரின் கான்வாய் வாகனங்களுக்காக, மக்களின் வாகனங்களை நிறுத்த வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X