பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் இருந்து நலம் அடைந்தவர் நர்சுகள் காலில் பூத்துாவி நன்றி தெரிவிப்பு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நுரையீரலில் பாதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் சிகிச்சையில் குணமடைந்த வக்கீல் தன்னை கவனித்துக் கொண்ட நர்சுகளின் காலில் பூக்கள் துாவி நன்றி செலுத்தினார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிமாறன் 50. கடந்த சில நாட்களாக அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அறந்தாங்கி அரசு
 கொரோனாவில் இருந்து நலம் அடைந்தவர் நர்சுகள் காலில் பூத்துாவி நன்றி தெரிவிப்பு

புதுக்கோட்டை:அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று நுரையீரலில் பாதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் சிகிச்சையில் குணமடைந்த வக்கீல் தன்னை கவனித்துக் கொண்ட நர்சுகளின் காலில் பூக்கள் துாவி நன்றி செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிமாறன் 50. கடந்த சில நாட்களாக அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்ந்தார். ஆரம்ப கட்டத்தில் இருமலுடன் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட இவர் தொடர் சிகிச்சையால் முழுமையாக குணமடைந்தார்.

இவர் மருத்துவமனையில் இருக்கும் பொழுது இவரை அக்கறையுடன் பார்த்துக் கொண்ட நர்சுகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று வக்கீல் மணிமாறன் நினைத்தார்.நேற்று முன்தினம் மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு கிளம்பும் முன் தன்னை கவனித்துக் கொண்ட நர்சுகளை வார்டு வாசலில் நிற்க வைத்து அவர்களின் பாதங்களில் பூக்களை துாவி கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.

அப்போது நர்சுகளிடம் என்னை எந்த அளவிற்கு கவனித்துக் கொண்டீர்களோ அதுபோல இங்கு வரும் அனைத்து நோயாளிகளையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று வக்கீல் மணிமாறன் வேண்டுகோள் விடுத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X