கொரோனாவுடன் கேனைன் டிஸ்டெம்பர் உயிரிழந்த சிங்கத்தால் அதிகாரிகள் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுடன் 'கேனைன் டிஸ்டெம்பர்' உயிரிழந்த சிங்கத்தால் அதிகாரிகள் கவலை

Added : ஜூன் 12, 2021
Share
சென்னை:வண்டலுார் உயிரியல் பூங்காவில், மேலும் இரண்டு சிங்கங்களுக்கு, கொரோனா மற்றும் 'கேனைன் டிஸ்டெம்பர்' என்ற மற்றொரு வைரஸ் பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது; இதனால், அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள, 11 சிங்கங்களில், ஒன்பது சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டன. அவற்றில், நீலா என்ற பெண் சிங்கம்,
 கொரோனாவுடன் 'கேனைன் டிஸ்டெம்பர்' உயிரிழந்த சிங்கத்தால் அதிகாரிகள் கவலை

சென்னை:வண்டலுார் உயிரியல் பூங்காவில், மேலும் இரண்டு சிங்கங்களுக்கு, கொரோனா மற்றும் 'கேனைன் டிஸ்டெம்பர்' என்ற மற்றொரு வைரஸ் பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது; இதனால், அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள, 11 சிங்கங்களில், ஒன்பது சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டன. அவற்றில், நீலா என்ற பெண் சிங்கம், 3ம் தேதி இறந்தது.மேலும், கவிதா, 23, புவனா, 19, என்ற இரு சிங்கங்களின் நிலை மோசமானது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை டாக்டர்கள், உயிரியல் பூங்கா வனவிலங்கு டாக்டர்கள், அவற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதனிடையே, மூன்று சிங்கங்கள், நான்கு புலிகளின் சளி, ரத்த மாதிரிகள், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள நோய் கண்டறியும் ஆய்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன. இதன் ஆய்வு முடிவுகள் நேற்று வந்துள்ளன.மூன்று சிங்கங்களில் ஒன்று, இறந்த நீலா. அதற்கு, கொரோனா மற்றும் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும், 'கேனைன் டிஸ்டெம்பர்' என்ற நோய் பாதிப்பும் இருந்தது கண்டறியப்பட்டது.கேனைன் டிஸ்டெம்பர் நோய்க்கு தடுப்பூசி உண்டு; ஆனால், மருந்து கிடையாது. காற்றில் பரவும் வைரஸ் நோய் இது.எனவே, பூங்காவில் பணிபுரியும், 168 ஊழியர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ளது.வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு நேற்று, பூங்காவில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள விலங்குகளின் நிலை மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X