மேற்கு மண்டலத்தில் வலம் வந்த இன்ஸ்., டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு மண்டலத்தில் 'வலம்' வந்த இன்ஸ்., டி.எஸ்.பி.,க்கள் மாற்றம்

Added : ஜூன் 12, 2021
Share
சேலம்:மேற்கு மண்டலத்திலேயே வலம் வந்த இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், தென் மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம், ஆளுங்கட்சி ஆதரவு அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும். அதற்கேற்ப, அவர்கள் தேர்தலுக்கு முன், போலீசின் மேற்கு மண்டலமான, கோவை, சேலம் சரகத்துக்கு மாற்றம் பெற்றுச்செல்வதும், தேர்தல் முடிவுக்கு

சேலம்:மேற்கு மண்டலத்திலேயே வலம் வந்த இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள், தென் மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம், ஆளுங்கட்சி ஆதரவு அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும். அதற்கேற்ப, அவர்கள் தேர்தலுக்கு முன், போலீசின் மேற்கு மண்டலமான, கோவை, சேலம் சரகத்துக்கு மாற்றம் பெற்றுச்செல்வதும், தேர்தல் முடிவுக்கு பின், மீண்டும் பழைய இடத்தில் பணியை பெறுவதும் வழக்கம்.இதற்காக, மேற்கு மண்டலத்தில், 'பசை' உள்ள பதவிகள், குறைந்தபட்சம், 5 லட்சம் முதல், 30 லட்சம் ரூபாய் வரை விலை போவது வழக்கத்தில் இருந்தது.தேர்தலுக்கு முன், கோவை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்ட, தற்போதைய உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசிர்வாதம், கோவை போலீசில் அரசியல் தலையீடு, ஆளுங்கட்சியினருக்கு அதிகாரிகள் விலை போவதை கவனித்தார்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கோவை மாநகர் சுத்தம் செய்யப்பட்டு, அங்கு பணிபுரிந்த டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பின், சாதாரண பதவிகளுக்கும், தென் மாவட்டங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம், கோவை, நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த, 10க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி.,க்கள், கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.தொடர்ந்து, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 20 ஆண்டுக்கு மேலாக வலம் வரும், 70 டி.எஸ்.பி., 60 இன்ஸ்பெக்டர்களை, தென் மாவட்டங்களில், சாதாரண பதவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர்.இதற்கு முன் இல்லாதபடி, தனி நபர் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதால், மேற்கு மண்டலத்திலேயே வலம் வந்த இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள் சோகம் அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X