சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளப்படகில் பயணம்: இந்தியா வந்த இலங்கைக்காரர்கள்: மதுரையில் 24 பேர் கைது

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
மதுரை:இலங்கையில் இருந்து கனடா நாட்டுக்கு செல்ல கள்ளப்படகில் துாத்துக்குடி வழியாக மதுரை வந்து தங்கியிருந்த 23 பேர், ஏஜன்ட் ஒருவர் என 24 பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இலங்கையைச் சேர்ந்த சிலர், மதுரை கப்பலுாரில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக 10 நாட்களாக தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனை செய்ததில் 2 சிங்களர்கள் உட்பட 21 இலங்கை

மதுரை:இலங்கையில் இருந்து கனடா நாட்டுக்கு செல்ல கள்ளப்படகில் துாத்துக்குடி வழியாக மதுரை வந்து தங்கியிருந்த 23 பேர், ஏஜன்ட் ஒருவர் என 24 பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த சிலர், மதுரை கப்பலுாரில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக 10 நாட்களாக தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனை செய்ததில் 2 சிங்களர்கள் உட்பட 21 இலங்கை தமிழர்கள் இருந்தனர்.

விசாரணையில், கனடா நாட்டுக்கு தங்களை அனுப்புவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மதுரை கூடல்நகர் அசோக்குமார் தங்க வைத்ததாக கூறினர். அசோக்குமார் தலைமறைவானார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 23 பேர், ஏஜன்ட் ஒருவர் என 24 பேரை நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: கனடா நாட்டில் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு விசா தருவது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்கள் செய்கின்றனர். அவர்களிடம் வேலை செய்ய 23 பேர் விரும்பி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அசோக்குமார் தொடர்பு கொண்டுள்ளார். இவர் சகோதரி சியாமளா தேவி இலங்கை தாதா அங்கொடா லொக்கா இறந்த விவகாரத்தில் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக கைதானவர்.

இவர்களின் குடும்பத்திற்கும், இலங்கை தமிழர்களுக்கும் நீண்டகால தொடர்பு உண்டு. அதன் அடிப்படையில் 23 பேரை சட்டவிரோதமாக அசோக்குமார் அழைத்து வந்துள்ளார். சில போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். அசோக்குமாரிடம் விசாரித்தால் முழுமையான விபரங்கள் தெரியவரும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X