மங்களூருவில் 38 இலங்கை தமிழர்கள் கைது

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
மங்களூரு:ஒன்றரை மாதமாக மங்களூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 38 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் வெளிநாட்டு பிரஜைகள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக சி.சி.பி. எனும் மத்திய குற்றவியல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நகர் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி கண்காணித்து வந்தனர்.இதற்கிடையில் நகரின் இரண்டு
 மங்களூருவில் 38 இலங்கை தமிழர்கள் கைது

மங்களூரு:ஒன்றரை மாதமாக மங்களூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 38 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் வெளிநாட்டு பிரஜைகள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக சி.சி.பி. எனும் மத்திய குற்றவியல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நகர் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையில் நகரின் இரண்டு வீடுகளில் 38 இலங்கை தமிழர்கள் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சி.சி.பி. போலீசார் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்ச் 17ல் இலங்கையிலிருந்து 39 தமிழர்கள் புறப்பட்டு கடல் மார்க்கமாக தமிழகத்தின் துாத்துக்குடிக்குள் நுழைந்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பாதுகாப்பு காரணமாக பஸ்கள் மூலம் ஒன்றரை மாதங்களுக்கு முன் பெங்களூரு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மங்களூரு அழைத்து வந்துள்ளனர்.

இரண்டு லாட்ஜ் மற்றும் இரண்டு வீடுகளில் தங்கியிருந்த 38 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் இலங்கைக்கே சென்று விட்டதாக கூறினர்.ஆனாலும் அவரை தேடி வருகின்றோம். கனடாவில் கூலி வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமிருந்து ௬ லட்சம் ரூபாய் முதல் ௧௦ லட்சம் ரூபாய் வரை இலங்கை ஏஜன்ட்கள் பெற்றுள்ளனர்.மங்களூரிலிருந்து கள்ள படகுகள் மூலம் கனடா செல்ல திட்டமிட்டிருந்தாக தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட்கிடையாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கைது செய்துள்ளோம். வெவ்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மங்களூருவை சேர்ந்த ஆறு பேரை பிடித்து அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X