பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று கூடுகிறது

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தொற்று தடுப்பு சாதனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது பற்றி, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 44வது கூட்டம் இன்று நடக்கிறது.'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடக்கும் இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர்,

புதுடில்லி:கொரோனா தொற்று தடுப்பு சாதனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது பற்றி, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 44வது கூட்டம் இன்று நடக்கிறது.'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடக்கும் இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கொரோனா சிகிச்சைக்கு அத்தியாவசிய தேவைகளான மருத்துவ ஆக்சிஜன், கிருமிநாசினி, வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.கொரோனா மற்றும் கறுப்பு பூஞ்சை நோய்களுக்கான மருந்துகளுக்கு வரி குறைப்பது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X