பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா 2வது அலையில் சிறுவர்கள் பாதிப்பு அதிகம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில் கொரோனா தொற்றால் ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 2.04 சதவீதம் பேர்; மே மாதத்தில் 2.045 சதவீதம் பேர், ஜூன் மாதத்தில் 10ம் தேதி வரை 2.17 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:முதல் அலையின்போது, முதியவர்கள் பாதிக்கப்பட்டனர்.இரண்டாவது அலையில், நடுத்தர

சென்னை:சென்னையில் கொரோனா தொற்றால் ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் 2.04 சதவீதம் பேர்; மே மாதத்தில் 2.045 சதவீதம் பேர், ஜூன் மாதத்தில் 10ம் தேதி வரை 2.17 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:முதல் அலையின்போது, முதியவர்கள் பாதிக்கப்பட்டனர்.இரண்டாவது அலையில், நடுத்தர வயதினர், இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவை பொருத்தவரை, அது ஒரு வைரஸ், ஏதேனும் ஒரு வகையில், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.அதாவது, இதற்கு முன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.இதன் காரணமாக, அடுத்த வயது உடையவர்களான இளைஞர்கள், சிறுவர்களிடம் தொற்று பாதிப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிறிய தளர்வுகளுக்கே, பொது மக்கள் இயல்பாக வெளியே வர துவங்கி விட்டனர். தற்போதே பலர் முகக்கவசம் அணிவதில்லை; சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை.இந்நிலை தொடர்ந்தால், மூன்றாவது அலை தீவிரமாக இருப்பதுடன், இளைஞர்கள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் நலன் கருதி, பெற்றோர், கொரோனா வழிக்காட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X