சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 மாவட்டங்களில் நேற்றைய பலி 35..,,

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று 35 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.மதுரையில் நேற்று புதிதாக 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1060 பேர் குணமடைந்த நிலையில் 7 பேர் பலியாகினர். மொத்தம் 69 ஆயிரத்து 597 பேர்

மதுரை : மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று 35 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.மதுரையில் நேற்று புதிதாக 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 1060 பேர் குணமடைந்த நிலையில் 7 பேர் பலியாகினர். மொத்தம் 69 ஆயிரத்து 597 பேர் பாதிக்கப்பட்டதில் 61 ஆயிரத்து 517 பேர் குணமடைந்தனர். மொத்த பலி 1016. தற்போது 7064 பேர் சிகிச்சையில் உள்ளனர். பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 518 பேர். வீட்டுத் தனிமையில் 3531 பேர் உள்ளனர். 3389 ஆக்சிஜன் படுக்கைகளில் 1302, 1553 சாதாரண படுக்கைகளில் 490, 676 ஐ.சி.யு., படுக்கைகளில் 467 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது பெரிய தனியார் மருத்துவமனை கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெறுவோர் அதிகமாக உள்ளனர். ஜூன் 10 வரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 957 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் நேற்று ஐந்தாவது நாளாக போடப்படவில்லை. இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 769 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் புதிய தொற்று 207, குணமடைந்தோர் 252, பலி 5, இதுவரை 29ஆயிரத்து 962 பேர் பாதிக்கப்பட்டதில் 27 ஆயிரத்து 594 பேர் குணமடைந்தனர். 491 பேர் இறந்தனர். 1877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

910 ஆக்சிஜன் படுக்கைகளில் 626, 1223 சாதாரண படுக்கைகளில் 545, 150 ஐ.சி.யு., படுக்கை களில் 89 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தேனியில் 212 பேர் பாதிக்கப்பட்டனர். 524 பேர் குணமடைந்தனர். 13 பேர் இறந்தனர். 40ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டதில் 37 ஆயிரத்து 218 பேர் குணமடைந்தனர். 444 பேர் பலியாகினர். 2661 பேர் சிகிச்சையில் உள்ளனர். 631 ஆக்சிஜன் படுக்கைகளில் 352, 381 சாதாரண படுக்கைகளில் 152, 66 ஐ.சி.யு.,வில் 56 பேர் சிகிச்சையில் உள்ளனர்.ராமநாதபுரத்தில் புதிய தொற்று 125, குணமடைந்தோர் 1190, பலி 4, மொத்த பலி 300, 18 ஆயிரத்து 565 பேர் பாதிக்கப்பட்டதில் 16914 பேர் குணமடைந்தனர். 1351 பேர் சிகிச்சையில் உள்ளனர். 581 ஆக்சிஜன் படுக்கைகளில் 172, 918 சாதாரண படுக்கைகளில் 75, 105 ஐ.சி.யு.,வில் 24 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

சிவகங்கையில் 117 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 215 பேர் குணமடைந்தனர். இருவர் பலியாகினர். 16ஆயிரத்து 46 பேர் பாதிக்கப்பட்டதில் 14ஆயிரத்து 446 பேர் குணமடைந்தனர். 179 பேர் பலி. 1421 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1152 ஆக்சிஜன் படுக்கைகளில் 430, 797 சாதாரண படுக்கைகளில் 286, 174ஐ.சி.யு.,வில் 130 பேர் சிகிச்சையில் உள்ளனர்.விருதுநகரில் 290 பேர் பாதிக்கப்பட்டு 485 பேர் குணமடைந்தனர். 4 பேர் பலி. இதுவரை 42 ஆயிரத்து 151 பேர் பாதிக்கப்பட்டதில் 38 ஆயிரத்து 453 பேர் குணமடைந்தனர். 479 பேர் இறந்தனர். 3219 பேர் சிகிச்சையில் உள்ளனர். 719 ஆக்சிஜன் படுக்கைகளில் 441, 621 சாதாரண படுக்கைகளில் 306, 141 ஐ.சி.யு.,வில் 86 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தாலும் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் பொதுவெளியில் அதிகமாகும். எனவே ஒவ்வொருவரும் அதிக கவனத்துடன் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X