சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய கடன் வசூலை ஒத்திவைக்க வழக்கு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
மதுரை : தேசிய, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் விவசாய கடன் வசூல் நடவடிக்கையை ஒத்திவைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக் கண்ணு தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 4 ஆண்டுகளாக பருவமழை சரியாக பொழியவில்லை. குறித்த நேரத்தில்

மதுரை : தேசிய, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் விவசாய கடன் வசூல் நடவடிக்கையை ஒத்திவைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக் கண்ணு தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 4 ஆண்டுகளாக பருவமழை சரியாக பொழியவில்லை. குறித்த நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கவில்லை. டெல்டா பகுதியில் 75 சதவீத நிலத்தில் சாகுபடி நடக்கவில்லை. 2020 ல் எதிர்பாராத தொடர்மழையால் பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகள் அதிக இழப்பை சந்தித்தனர். தேசிய, தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் பல விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர்.

பருவமழை தவறியது , ஊரடங்கால் விவசாயிகள் அன்றாட வாழ்க்கை நடத்த சிரமப்படு கின்றனர். இந்நிலையில் விவசாயிகளிடம் கடன் வசூலிக்க வங்கிகள் கட்டாயப்படுத்தி கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதை எதிர்த்து கடன் வசூல் தீர்ப்பாயங்களில் வழக்குகள் தாக்கலாகின்றன. சில விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.சிறு, நடுத்தர தொழில் களுக்கு கடன் வசூலில் சில சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழக அரசு அறிவித்தது.

தேசிய, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி கடன் வசூல் நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். வசூல் நடவடிக்கைகளை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அய்யாக்கண்ணு குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு: இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விவகாரம். இது தொடர்பாக முதல்வர் உயர்மட்ட அளவில் பேச நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போதைய நிலையில் எவ்வித உத்தரவையும் இந்நீதிமன்றம் பிறப்பிக்க இயலாது. மத்திய நிதித்துறை செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், தமிழக வேளாண்துறை செயலளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜூலை 8 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X