கொரோனா இறப்புக்கு இழப்பீடு: அரசு பதில் அளிக்க அவகாசம்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனாவால் இறந்தோர் வாரிசுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கவும், இத்தொகையை பெற, இறப்பு சான்றிதழில் கொரோனா காரணம் என குறிப்பிடவும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்குவந்தன. அப்போது பீஹார் அரசு,

புதுடில்லி : கொரோனாவால் இறந்தோர் வாரிசுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கவும், இத்தொகையை பெற, இறப்பு சான்றிதழில் கொரோனா காரணம் என குறிப்பிடவும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.latest tamil newsஇந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்குவந்தன. அப்போது பீஹார் அரசு, கொரோனாவால் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு 4லட்சம் ரூபாய் அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டி, மத்திய அரசின் நிலை என்ன என அமர்வு கேட்டது.


latest tamil newsமத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''கொரோனாவால் இறந்தோரின் குடும்பங்கள் பாதிக்கப் பட்டிருப்பது உண்மை. இது குறித்த விபரங்களை சேகரித்து வழங்க, இரு வாரங்கள் அவகாசம் தேவை,'' என்றார்.'இரு வாரங்கள் எதற்கு' என, கேள்வி கேட்ட நீதிபதிகள், 10 நாட்கள் அவகாசம் தருவதாக கூறி, அதற்குள் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
12-ஜூன்-202110:41:47 IST Report Abuse
sahayadhas எதுவும் நடக்காது மனிதன் உழைப்பை திருடும் திருட்டு கூட்டம்
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
12-ஜூன்-202109:03:38 IST Report Abuse
W W இப்போது கொடுக்கபடும் இறப்பு சான்றிதலில் இறப்பிற்காண காரணம் என்ற காலமே கொடுக்கப்படவில்லை இதனை மறு பரிசிலனை செய்ய வேண்டும்.எந்த லோகதிலும் இது மாதிறி இறப்பிற்காண காரணம் விட்டு போக வில்லை.ஏன் அதற்கு இந்த பகுபாடு?? இது ஒரு பேஸிக் தவறுதான் இதில் எதோ ஒரு சூட்சமம் உள்ளது.பவப்பட்ட மக்களுகு கிடைக்க வேன்டி ய சொல்ப துகையும் கிடைக்கமல் போய் விடும் . இதனை போன அரசு அப்படி செய்தது அதையே தான் நாங்களும் பாலே செய்கிறோம் என்று கூறிகொள்ள கூடாது, அதனை திருத்த ஆவன செய்ய வேண்டும் .இதை எப்படி கன்பிர்ம் ஆக எழுதிகிறேன் என்றால் இதில் பாதிக்கப்பட்டவர் என் அயல் வீட்டுக்காரர்.இதில் தற்போதுள்ள ஒரு sample Death Certificate யை வேண்டுமானால் கொடுக்க இடம் கொடுத்தால் இணைக்க தயாராக உள்ளேன்.
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
12-ஜூன்-202108:44:41 IST Report Abuse
Rajasekaran இரு வாரங்கள் எதற்கு ? பத்து நாட்கள் தான் தர முடியும் இந்த பதிலில் , நான் கொடுப்பவன் , நீ வாங்குபவன் என்ற மமதையின் வெளிப்பாடு தான் தெரிகிறது இதில் உச்ச பட்ச வேதனை என்னவென்றால் , இப்படி கூறுபவர்கள் , சில மாதங்களில் முடித்து வைக்கக்கூடிய எளிமையான வழக்குகளைக்கூட பல வருடங்களுக்கு பலராலும் இழுத்தடிப்பதை அனுமதித்துக்கொண்டும் , அமைதியுடன் ரசித்து அனுபவிப்பவர்களும் தான் இந்த நிலை மாற வேண்டும் என்றால் , வக்கீலாக தொழில் செய்ய வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்திய ராணுவத்தில் மூன்றாண்டுகள் சேவை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை சட்ட பூர்வமாகக் கொண்டு வரவேண்டும் அப்போதுதான் நீதி மன்றங்களில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் நேரத்தின் அருமை தெரியும் . வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X