சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைதுதேவதானப்பட்டி : மேல்மங்கலம் அருகே ஒத்தவீடைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 46. இவரது மகன் விஜய் 26. இருவரும் தோப்பு வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சி அந்தப்பகுதியில் விற்று வந்தனர். சின்னச்சாமியை, ஜெயமங்கலம் எஸ்.ஐ., சாகுல்ஹமீது கைது செய்தார்.சாராய ஊறல், கேன்கள், குக்கர் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய விஜயை போலீசார்

தமிழக நிகழ்வுகள்
1. குக்கரில் சாராயம் காய்ச்சியவர் கைது
தேவதானப்பட்டி : மேல்மங்கலம் அருகே ஒத்தவீடைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 46. இவரது மகன் விஜய் 26. இருவரும் தோப்பு வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சி அந்தப்பகுதியில் விற்று வந்தனர். சின்னச்சாமியை, ஜெயமங்கலம் எஸ்.ஐ., சாகுல்ஹமீது கைது செய்தார்.

சாராய ஊறல், கேன்கள், குக்கர் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.* கம்பம் கம்பமெட்டு வனப்பகுதியில் மந்திப்பாறை, ஏகலூத்து , கொச்சரவு உள்ளிட்ட இரு மாநில எல்லையோரத்தில் மதுவிலக்கு டி.எஸ்.பி.ரமேஷ் ,கம்பம் மேற்கு ரேஞ்சர் அன்பு ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது. கும்பல் கள்ளச்சாராயம் காய்ச்சி கேரளாவிற்குள் எடுத்துச் சென்றது தெரிந்தது. மேல்விசாரணை நடக்கிறது.latest tamil news2. 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன அதிபர் கைது
சென்னை :கடன் பத்திரம்வாயிலாக 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், மும்பை நிதி நிறுவன அதிபரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ரவி பார்த்தசாரதி, 69; நிதி நிறுவன அதிபர். இவர் அங்கு, ஐ.டி.என்.எல்., என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவர், சென்னை அண்ணா சாலையில் செயல்படும், மூன்ஸ் டெக்னாலஜி லிமிடெட் என்ற நிறுவனத்திடம், கடன் பத்திரம் பெற்று 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மோசடி நடந்து இருப்பது உண்மை என தெரிய வந்தது.இதையடுத்து சில மாதங்களுக்கு முன், ரவி பார்த்தசாரதியின் கூட்டாளிகள், அரி சங்கரன், ராம்சந்த் கருணாகரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


latest tamil newsஇந்நிலையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரவி பார்த்தசாரதி, முன் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, மும்பையில் பதுங்கி இருந்த ரவி பார்த்தசாரதியை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.மேலும், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், டி.எஸ்.பி., பிரகாஷ்பாபு என்பவரின் 95511 33229, 94981 09600 என்ற மொபைல் போன் எண்கள் வழியாகவும், dsp3eow@gmail.com என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம் என, போலீசார் அறிவித்துள்ளனர்.

3. ரூ.3 லட்சம் மது கடத்தல் 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் போலீசார் நேற்று காலை, புது உச்சிமேடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது பாழடைந்த வீட்டில், பெங்களூரில் இருந்து கடத்தி வந்து, விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. மது பாட்டில்களை கடத்தி வந்த செல்வம், 35, ராஜ்குமார், 35, ஆகியோரை கைது செய்தனர். 3 லட்சம் ரூபாய் மதிப்பில், 66 பெட்டிகளில் இருந்த, 3,168 குவார்ட்டர் மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 'மினி வேன்' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


latest tamil news


Advertisement


4. சுண்ணாம்பு கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறையில் சுண்ணாம்புக்கல் கடத்திய டிப்பர் லாரி, மண் வெட்டும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜிலியம்பாறை தாசில்தார் சிவபாலன், துணை தாசில்தார் ஜேசுராஜ் ஆலம்பாடி சென்ற போது சத்திரப்பட்டியில் எதிரே வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அனுமதி பெறாமல் 10 டன் சுண்ணாம்புக்கல்லை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியையும், சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்.ஐ., மலைச்சாமி வாகனத்தை பறிமுதல் செய்தார். டிரைவர்கள் தப்பியோடி விட்டனர்.

5. மாணவி பாலியல் பலாத்காரம் 'ஜூடோ' மாஸ்டரிடம் கிடுக்கிப்பிடி
சென்னை:தன்னிடம் பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவியை, காரில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஜூடோ மாஸ்டர் கெபிராஜிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லுாரி ஒன்றில் படித்து வந்தார். ஜூடோ போட்டிகளில் பதக்கம் பெற வேண்டும் என்ற கனவில், அவர் பள்ளி படிப்பின்போது அறிமுகமான, ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை சந்தித்து பயிற்சி பெற்று வந்தார்.இந்த மாணவியை கெபிராஜ் 2014ல், நாமக்கல்லில் நடந்த போட்டியில் பங்கேற்க காரில் அழைத்துச் சென்றார்.


latest tamil newsகாரில் சென்னைக்கு திரும்பும் போது, கெபிராஜ் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து அந்த மாணவி, போலீசில் புகார் அளித்தார். சென்னை அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரித்து, கெபிராஜை, ஜூன் 30ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவரது நண்பர்களிடம் நடந்த விசாரணையில், கெபிராஜின் காம லீலைகள் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது. மேலும், கெபிராஜ் மீது பல மாணவியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர். இதனால், இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்.இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மகளிர் போலீசாரிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி, விசாரணையை துவக்கினர். விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப் பட்டுள்ளார்.

இவரது தலைமையிலான சி.பி.சி.ஐ.டி., போலீசார், கெபிராஜை இரண்டு நாட்கள், தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கெபிராஜுக்கு சினிமா தொடர்பு அதிகம் என, தெரியவந்துள்ளது. இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவியை, நண்பர்களுக்கு விருந்து படைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கெபிராஜ், பெண்கள் சிலருடன் குத்தாட்டம் போடும், 'வீடியோ'வையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.


latest tamil newsஇந்தியாவில் குற்றம் :
எம்.பி.,யிடம் மோசடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ராம்விச்சர் நேதமின், 'கிரெடிட் கார்டு' வாயிலாக, 37 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் மர்ம நபர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


latest tamil newsஉலக நடப்பு
பாட்டி, பேரன் கொலை கொலையாளியும் பலி
ராயல் பாம் பீச்:அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் பாட்டி மற்றும் அவரது பேரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது ராயல் பாம் பீச். இங்குள்ள 'பப்ளிக்ஸ்' என்ற சூப்பர் மார்க்கெட் நேற்று முன்தினம் பரபரப்பாக இயங்கியது. அப்போது அங்கு வந்த டிமோதி ஜெ.வால் 55 என்பவர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுடத் துவக்கினார். மூதாட்டி ஒருவரையும் அவரது 1 வயது பேரனையும் மட்டும் சுட்டுக் கொன்றார். பின் தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X