வேலையாட்களுக்கு பாதுகாப்பு இந்தியா - குவைத் ஒப்பந்தம்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
குவைத் : குவைத்தில் வீட்டு வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.மத்திய கிழக்கு நாடான குவைத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இங்கு வீட்டு தொழிலாளர்களாக பணியாற்றும் இந்தியர்களை ஒரு சட்ட கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு

குவைத் : குவைத்தில் வீட்டு வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.



latest tamil news



மத்திய கிழக்கு நாடான குவைத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இங்கு வீட்டு தொழிலாளர்களாக பணியாற்றும் இந்தியர்களை ஒரு சட்ட கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதில் அந்நாட்டிற்கான இந்திய துாதர் சிபி ஜார்ஜ் மற்றும் குவைத் வெளியுறவு துறை துணை அமைச்சர் மஜ்தி அஹ்மத் அல் தபிரி ஆகியோர் நேற்று முன்தினம் கையெழுத்திட்டனர். அப்போது நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அஹ்மத் நாசர் அல் முகமது அல்- சபா ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து குவைத்தில் உள்ள நம் துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:குவைத் நாட்டினர் இந்தியர்களை வீட்டு வேலைகளில் சேர்ப்பதை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பணியில் சேர்வோருக்கு சட்ட பாதுகாப்பை வழங்க இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.இதன் வாயிலாக வேலை வழங்குவோர் மற்றும் வீட்டு தொழிலாளிகளின் உரிமை மற்றும் கடமைகளை உறுதி செய்வதற்கான வேலைவாய்ப்பு ஒப்பந்தம் அறிமுகம் செய்யப்படும்.


latest tamil news



இங்குள்ள தொழிலாளர்களுக்கு 24 மணி நேர உதவிக்கான அமைப்பு உருவாக்கப்படும். ஒப்பந்தத்தை மறு ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்ய குழு அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X