அரசியல் செய்தி

தமிழ்நாடு

' பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு வரி குறைக்கலாம்'

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
காரைக்குடி : ''பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டுமெனில் மத்திய அரசு விதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும்'' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு எந்த காரணத்தையும் இதுவரை சொல்லவில்லை. விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் வரிவிதிப்பு கொள்கை தான். நான் நிதியமைச்சராக

காரைக்குடி : ''பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டுமெனில் மத்திய அரசு விதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும்'' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.latest tamil newsகாரைக்குடியில் அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசு எந்த காரணத்தையும் இதுவரை சொல்லவில்லை. விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் வரிவிதிப்பு கொள்கை தான். நான் நிதியமைச்சராக இருந்தபோது, கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 105 டாலர். அப்போது கூட இந்த விலை உயர்வு இல்லை.

தற்போது பீப்பாய் 70 டாலர் தான். மூன்றில் இரண்டு பங்கு தான். அன்று பெட்ரோல் ரூ.55க்கு விற்க முடிந்தது. இன்று ரூ.100க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒரே வழி மத்திய அரசு போடக்கூடிய வரிகளை குறைக்க வேண்டும்.


latest tamil newsதடுப்பூசி தட்டுப்பாடு தீராது. 180 கோடி தடுப்பூசி வேண்டும். இவ்வளவு தடுப்பூசியை இந்தியாவில் உள்ள 2 நிறுவனங்களால் தயாரிக்க முடியாது. மத்திய அரசு தடுப்பூசி விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது. நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. மத்திய அரசு நடத்தும் கல்லுாரிகளுக்கு நீட் தேர்வு வைத்துக் கொள்ளட்டும்.

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கை தவிர வேறு வழியில்லை. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தால் ஊரடங்கு தேவையில்லை. தமிழக அரசின் ஒருமாத செயல்பாடு குறித்து தற்போது கணிக்க முடியாது'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
12-ஜூன்-202120:36:51 IST Report Abuse
Siva Subramaniam When I was young petrol was sold at Re.1 per liter. Crude was 35 cents per barrel. At that time one USD was equal to Re.4.00 only. So many governments have come and gone, so many Finance ministers have come and gone. Why these increase of fuel and loss per USD? Both state and central governments should review their respective tax structure levied to these fuel. Instead, each one is blaming the other. The best nate is to develop a strong, nate fuel, there by restricting dependency on conventional fuel.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
12-ஜூன்-202120:22:07 IST Report Abuse
unmaitamil நீ மத்திய "மந்தியாக", தரகு வியாபாரியாக இருந்தபோது செய்தாயா ??? நம்மநாட்ல அடுத்தவனுக்கு புத்தி சொல்பவர்கள் ஏராளம் ஏராளம். அதிமுக அரசை பெட்ரோல் வரியை குறைக்கச்சொல்லி ஊளை இட்ட இவர் இப்போது ஏன் பெட்ரோல் வரியை குறைக்கவில்லை ???
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-ஜூன்-202119:02:45 IST Report Abuse
மலரின் மகள் வசூலிக்க முடிகின்ற வரிகளை பரவலாக்கி வசூலித்தால் எரிபொருள் விலையின் மீதான வரிகளை குறைத்து விலை ஏற்றத்தை தடுக்க முடியும். அரசிற்கு சிக்கலின்றி வசூலாகும் வருவாய் எரிபொருளாகவும், மெதுவாகவும், புகையிலை பொருட்களாகவும் மட்டுமே முக்கியமாக தொடர்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு கடினம் இல்லை என்பதை இந்த கொரநா கால கட்டுப்பாடுகள் தெளிவாக்கி இருக்கின்றன. வருவாய் இனத்தின் முக்கிய பங்காற்றுவதை அரசால் நிறுத்த முடியாத நிலையினால் மது தொடரத்தான் செய்கிறது. அரசின் வருமானத்திற்கான ஆதாயங்களை பெருக்கி மது விற்பனையை தவிர்க்க முயலவேண்டும். அரசு மதுவை நம்பி இருப்பது நலமல்ல. பொதுவாக வாழ்க்கை தரமானது மத்தியதரவர்கத்தினருக்கு குடிகொண்டிருக்கிறது ஓரளவிற்கு அரசு ஊழியர்கள் இந்த வகையில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஊதியம் கூடுவதால் இது சாத்தியமானது. தரப்படுகின்ற சம்பளத்தை கூட்டவேண்டும் ஆனால் அதற்கு அரசின் நிதி ஆதாரங்கள் சரியாக இல்லை மற்றும் பகிர்மானங்கள் சமன்படுத்தப்படவில்லை. எரிபொருள் விலை ஏற்றத்திற்கு மத்திய அரசின் மீது பழிபோடும் மாநில அரசும் அதற்கு ஆதரவு அளிக்கும் அரசின் ஊழியர்களும் வாட்சப்பில் பகிர்வதும் பரப்புவதும் சரியாக தெரியவில்லை. இவர்கள் கேட்பது போல வரியை குறைத்து விலையை குறைப்பது என்பது வெறும் எழுத்தளவில் எடுக்கப்படவேண்டிய செயலா? அரசின் வருவாயில் 93 சதவீதம் ஊழியராக தரப்படுகிறது என்று சொல்கிறார்கள். அப்படிவைத்து கொண்டால் பெட்ரோல் மீதான வரியை பத்து சதவீதம் குறைத்தால் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தில் பத்து சதவீதத்தை குறைத்து விடவேண்டியது தான். சரியாகி விடும். அதை அவர்கள் விரும்புவது இல்லை. அரசும். அப்படியென்றால் விலையேற்றத்தை ஏற்கவேண்டி இருக்கிறது. அரசின் ஊதியம் பெறாதவர்கள் தலையில் இது வந்து விழுகிறது. பெட்ரோல் டீசல் விலையில் ஒரு இருபது சதவீதத்தை குறைத்து விட்டு அதற்கு ஈடாக எரிபொருள் செஸ் என்று ஊதியத்தில் வரிவிதித்து விடவேண்டியது தான். சாமானியர்களுக்கு நலம், பகிர்வீட்டு தர்மம் நிலைப்படுத்தப்படுமல்லவா? ஓய்வூ வயதை அறுபதாக்கி அவர்கள் எந்த வேலையும் இல்லாமல் பென்ஷன் பெறுவதற்கு பதிலாக முழு சம்பளமும் பெறுகிறார்கள். இதுபோன்ற நிர்வாக நடவடிக்கைகள் சரியா என தெரியவில்லை. கடந்த மாதம் பல ஆயிரம் கோடிக்கு கடன்பத்திரங்களை அதுவும் முப்பத்துவருடத்திற்கு எழுசதவீதத்திற்கு கூடுதலான வட்டியில் அரசு கடன் பெற்றிருக்கிறது, அதற்கு முந்தைய மாதத்தில் எழுசதவீதற்கு மிகசற்று குறைவாக வட்டி வீதத்தில் இருப்பது வருட நீண்ட கால கடனை பாத்திரம் மூலம் பெற்றிருக்கிறது. இப்படி கடனை பெற்று அரசு ஊதியம் தரவேண்டி இருக்கிறது. குறைந்த பட்சம் அந்த பாத்திரத்தின் மீதான வட்டியை யாவது சம்பளத்தில் ஏதேனும் வகையில் திரும்ப பெற்றுக்கொள்ள முயல கூடாதா? படிப்பு திறமையில் சமமாக இருக்கும் அரசு ஊழியர் மற்றும் ஊழியரல்லாதோருக்கான வேலைப்பளு மற்றும் ஊதிய விகிதங்கள் மிக பெரியளவில் சாமானிய அரசு ஊழியரல்லாதோருக்கு கண்ணில் சுண்ணாம்பாகவும் அரசு ஊழியர்களுக்கு வெண்ணைபோலவும் வித்தியாச வேறுபாடுகள் பெருகி கொண்டே இருப்பது சரியல்ல. இடைவெளி குறைக்கப்படவேண்டும். ஐந்து சதவீதற்கு கூடுதலாக அது இருக்கவே கூடாது. ஏற்றத்தாழ்வுகள் சமன்படுத்தப்படவேண்டும். பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய தேசங்களைப்போன்று. அது சரியல்ல, இது தவறு என்று குறை சொல்வதற்கு முன்னர், அதை எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்று விளக்கவேண்டுவது கடைமை. நிறூவனங்களாக கோர்ப்போரே களாக செயல்படுவோர் தரும் வரிகளால் அரசு இயந்திரத்தை ஒட்டி கொண்டிருக்கிறது. இன்றைய தடை காலத்திலும் அரசிற்கு அவர்கள் மூலம் வரி வந்து கொண்டே இருக்கிறது சில காலாண்டுகளில் அது கூடவும் செய்கிறது. வரி வசூல் குறையவில்லை. ஆனால் அவர்கள் போன்றல்லாமல் பல நிறூவனம் சாராதவர்களால் தொழில் செய்யமுடியாமல் வருமானம் இழப்பு என்று சொல்கிறார்கள். தெளிவாக தெரிகிறது அவர்களால் அரசிற்கு என்ன வருவாய்க்கு அவர்கள் உதவுகிறார்கள் என்று. அவர்களால் அரசிற்கு யாதொரு பிரயோசனமும் இல்லையா. கணக்குகளை அவர்கள் மறைக்கிறார்கள் வரி எய்கிறார்கள். ஆட்டோ முதல் வாடகைக்கார் ஓட்டுநர், டி கடை வைத்திருப்போர் எல்லாம் சொந்தமாக சொத்துக்களை பல லட்சங்களில் வாங்க முடிகிறது. அவர்களின் வருமானம் வரி செலுத்தப்படாமல் மறைக்கப்படுகிறது. ஏறத்தாழ ஐந்தில் நான்கு பங்கு பேர் வரிசெலுத்தாமல் தொழில் செய்து பணம் ஈட்டுகிறார்கள். குறைந்த பட்ச கட்டயாய நேரடி வரி செலுத்தும் வகையில் சட்டங்கள் மாற்றப்படவேண்டும். வரியே செலுத்தவில்லையென்றால் அவர்களுக்கு எந்த வித சொத்துக்களும் அசையும் அசையா சொத்துக்களும் வாங்க அனுமதி கூடாது. பட்டம், முதுகலை பட்டம், தொழிற்கல்வி பட்டம் பெற்றோர் அவரவர்களின் கல்வித்தகுதியில் அடிப்படைக்கு குறைந்த பட்ச வரியை ஈட்டத்தக்க அளவில் உழைத்து அரசிற்கு வரிசெலுத்தவேண்டும். ஒவ்வொரு பத்தாண்டிலும் அவர்கள் குறைந்த பட்ச வரியை சராசரியாக செலுத்தி இருக்கவில்லையென்றால் அவர்களின் காலிதகுதியின் அங்கீகாரத்தை குறைத்துவிடவேண்டும். படித்து தகுதியை கூட்டுவது உழைத்து அரசிற்கு வரிசெலுத்துவதற்காகவும் இருக்கவேண்டும். பரவலான வரி மனமுவந்து வரி உயரிய அளவிற்கு வரி செலுத்துவோர் நாட்டின் உயர்ச்சிக்கு பாடுபடுபவர்களாவார். ஓம் சாந்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X