சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கடலுார்-பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுாரில் நகராட்சி பூங்கா எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், வட்டாரத் தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலத்தில் கடலுார் ரோடு,

கடலுார்-பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுாரில் நகராட்சி பூங்கா எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், வட்டாரத் தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலத்தில் கடலுார் ரோடு, ஜங்ஷன் ரோடு பகுதிகளில் உள்ள நான்கு பெட்ரோல் பங்குகளின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசினார். நகர தலைவர் ரஞ்சித்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.திட்டக்குடி அடுத்த கோழியூரில் மாவட்ட காங்.,எஸ்.சி.,பிரிவு துணத்தலைவர் சீனிவாசன் தலைமையில் 9 பேர், தி.இளமங்கலத்தில் நகர விவசாய அணி தலைவர் சின்னசாமி தலைமையில் 6 பேர், கீழக்கல்பூண்டியில் மாவட்ட காங்., துணைத்தலைவர் நல்லதம்பி தலைமையில் 7 பேரும், ஆவட்டியில் வட்டார துணைத்தலைவர் விஜயகுமார் தலைமையில் 2 பெண்கள் உட்பட 10 பேர் பங்கேற்றனர்.பண்ருட்டி நகர காங்., சார்பில் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் முருகன், நடுவீரப்பட்டில், கடலுார் வட்டார தலைவர் சீத்தாராமன், குறிஞ்சிப்பாடியில் வட்டார தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினர். வடலுாரில் நகர தலைவர் சக்கரயாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மந்தாரக்குப்பம் கடை வீதியில் நகர தலைவர் தெய்வசிகாமணி, நல்லுார் ஒன்றிய காங்., சார்பில் வேப்பூர் கூட்டுரோட்டில் காங்., முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, பெண்ணாடத்தில் நல்லுார் வட்டார காங்., தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினர்.சேத்தியாத்தோப்பு அடுத்த ஆயிப்பேட்டை தனியார் பெட்ரோல் பங்க் முன் கீரப்பாளையம் வட்டார காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு செழியன் தலைமை தாங்கினார். நெல்லிக்குப்பத்தில் நகர தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் திலகர் பங்கேற்றனர்.ஸ்ரீமுஷ்ணம் வட்டார காங்., சார்பில் சோழத்தரம் மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர் வைத்தியநாதசாமி தலைமை தாங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X