பிராமணர் மீது அவதூறு; நடிகர் சேத்தன் மீது வழக்கு

Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
பெங்களூரு : பிராமண சமுதாயத்தையும், பிராமணர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கன்னட நடிகர் சேத்தன் மீது பசவனகுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கன்னட நடிகர்சேத்தன் சர்ச்சைக்குரிய வகையில்,பிராமணர்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவுகின்றன.இதை பார்த்த பிராமணர்கள், அவர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்; அவருக்கு எதிரான கருத்துகள் சமூக வலை
 பிராமணர் மீது அவதூறு; நடிகர் சேத்தன் மீது வழக்கு

பெங்களூரு : பிராமண சமுதாயத்தையும், பிராமணர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கன்னட நடிகர் சேத்தன் மீது பசவனகுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கன்னட நடிகர்சேத்தன் சர்ச்சைக்குரிய வகையில்,பிராமணர்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவுகின்றன.இதை பார்த்த பிராமணர்கள், அவர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்; அவருக்கு எதிரான கருத்துகள் சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த பவன்குமார் ஷர்மா என்பவர், பசவனகுடி காவல் நிலையத்தில், அந்த நடிகர் மீது புகார் செய்துள்ளார்.அதில், 'ஹிந்து மதத்தினரை பிரித்து, அவர்களிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடிகர் சேத்தன் பேசிஉள்ளார். பிராமண சமுதாயத்தையும், பிராமணர்களையும் தவறாக குறிப்பிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து, மத உணர்வை துாண்டும் வகையில் பேசியதாக நடிகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
15-ஜூன்-202117:34:44 IST Report Abuse
பிஞ்சதலையன் ஆக மொத்தம் இங்க பிராமண துவேஷம் சொல்லி பொழுதை கழிக்கும் ம(மா)க்கள் தென் இந்தியா முழுக்க இருக்கானுவோ போலிருக்கு இவன் என்ன தான் மூச்சை புடிச்சு கத்துனாலும் அவன் வேல பார்க்கற இடத்துல அந்த சமூகம் தான் ஏதோ ஒருவகையில படியளக்குது இது மறுக்க முடியாத உண்மை இந்த மாதிரி ஆளுங்க கரடியா கத்தறதுக்கு காரணம் அந்த சமூக அமைப்பு புடிச்ச இடத்தை இவனுக புடிக்க முடியல்லைங்கற ஆத்திரம் தான் காரணம் என்ன செய்ய டிசைன் அப்படி,
Rate this:
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
14-ஜூன்-202114:31:25 IST Report Abuse
Dinesh Pandian அங்கே ப்ராஹ்மண நல்வாழ்வு வாரியம் உள்ளது . எனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது . இங்கே என்ன இருக்கு ? இன்று அந்தணன் நாளை எந்த சிறுபனமயும் பாதிக்க படலாம்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14-ஜூன்-202113:35:52 IST Report Abuse
Sridhar ஏன் இம்மாதிரியான கேஸ்கள் தமிழகத்தில் போடப்படுவதில்லை? பிராமண அமைப்புகள் இதை செய்ய முன்வரவேண்டும். சமூகவலை தளங்களிலிருந்து துவங்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X