பிராமணர் மீது அவதூறு; நடிகர் சேத்தன் மீது வழக்கு| Dinamalar

பிராமணர் மீது அவதூறு; நடிகர் சேத்தன் மீது வழக்கு

Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (11)
Share
பெங்களூரு : பிராமண சமுதாயத்தையும், பிராமணர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கன்னட நடிகர் சேத்தன் மீது பசவனகுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கன்னட நடிகர்சேத்தன் சர்ச்சைக்குரிய வகையில்,பிராமணர்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவுகின்றன.இதை பார்த்த பிராமணர்கள், அவர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்; அவருக்கு எதிரான கருத்துகள் சமூக வலை
 பிராமணர் மீது அவதூறு; நடிகர் சேத்தன் மீது வழக்கு

பெங்களூரு : பிராமண சமுதாயத்தையும், பிராமணர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கன்னட நடிகர் சேத்தன் மீது பசவனகுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கன்னட நடிகர்சேத்தன் சர்ச்சைக்குரிய வகையில்,பிராமணர்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவுகின்றன.இதை பார்த்த பிராமணர்கள், அவர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்; அவருக்கு எதிரான கருத்துகள் சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த பவன்குமார் ஷர்மா என்பவர், பசவனகுடி காவல் நிலையத்தில், அந்த நடிகர் மீது புகார் செய்துள்ளார்.அதில், 'ஹிந்து மதத்தினரை பிரித்து, அவர்களிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடிகர் சேத்தன் பேசிஉள்ளார். பிராமண சமுதாயத்தையும், பிராமணர்களையும் தவறாக குறிப்பிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.இதையடுத்து, மத உணர்வை துாண்டும் வகையில் பேசியதாக நடிகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X