சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் தொற்றுக்கு 23 பேர்பலி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 18 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 23 பேர் இறந்தனர்.கடலுார் மாவட்டத்தில் மேலும் 354 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 210 ஆனது. நேற்று, 353 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 882 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளில் 4,065 பேர் சிசிச்சை

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 18 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 23 பேர் இறந்தனர்.கடலுார் மாவட்டத்தில் மேலும் 354 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 210 ஆனது. நேற்று, 353 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 882 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளில் 4,065 பேர் சிசிச்சை பெறுகின்றனர். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 612 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை 166 ஆகும்.கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கம்மாபுரம், மங்களூர், மருங்கூர், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி கடலுார், நெய்வேலி, விருத்தாசலம், நல்லுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 18 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 23 பேர் நேற்று ஒரே நாளில் இறந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 651 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X