ஐ.நா., பொதுச் சபையில் பேசுகிறார் பிரதமர் மோடி| Dinamalar

ஐ.நா., பொதுச் சபையில் பேசுகிறார் பிரதமர் மோடி

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (16)
Share
நியூயார்க்: அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். கடந்த 2019ல் பிரதமர் மோடி ஐ.நா.வின் 14வது பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்தார். உலகளவில் நடக்கும் நிலச்சீரழிவு அதிகரித்து வரும் பாலைவன பகுதிகள் வறட்சி ஆகியவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம்
PM Modi, UN, virtual high level dialogue

நியூயார்க்: அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

கடந்த 2019ல் பிரதமர் மோடி ஐ.நா.வின் 14வது பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்தார். உலகளவில் நடக்கும் நிலச்சீரழிவு அதிகரித்து வரும் பாலைவன பகுதிகள் வறட்சி ஆகியவற்றை தடுக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் ஐ.நா. பொதுச் சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் 14ம் தேதி ஐ.நா. பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை கூட்டுவதாக அறிவித்துள்ளார். இதில் இம்மாநாட்டின் தலைவரான பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாற்ற உள்ளார். ஐ.நா. உறுப்பு நாடுகள் விவசாய துறை தலைவர்கள் சர்வதேச சமுதாய குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X