பொது செய்தி

இந்தியா

வீணாகும் தடுப்பூசி குறித்து மத்திய அரசு அறிவுரை

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : 'உலகம் முழுதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், அவை வீணாவதை குறைத்தால் தான், இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி போட முடியும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தடுப்பூசி வீணாவதை, 1 சதவீதத்துக்கும் குறைவானதாக்க வேண்டும் என, மத்திய அரசு வேண்டு கோள்

புதுடில்லி : 'உலகம் முழுதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், அவை வீணாவதை குறைத்தால் தான், இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி போட முடியும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தடுப்பூசி வீணாவதை, 1 சதவீதத்துக்கும் குறைவானதாக்க வேண்டும் என, மத்திய அரசு வேண்டு கோள் விடுத்துள்ளது; இது நியாயமான, மிக தேவையான, சாதிக்க கூடிய வேண்டுகோள் தான். தடுப்பூசி தயாரிப்புக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது. எனவே, பெரும்பாலான நேரங்களில், வினியோகத்தை காட்டிலும், தேவை அதிகமாக உள்ளது.கொரோனா தொற்று பரவல் முடிவுக்கு வர வேண்டுமானால், தடுப்பூசி என்ற ஆயுதத்தை நியாயமாகவும், உகந்ததாகவும் நாம் பயன்படுத்த வேண்டும்.


latest tamil news



உலக அளவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால், அவை வீணாவதை குறைப்பதன் வாயிலாக, இன்னும் நிறைய பேருக்கு தடுப்பூசி போட முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜூன்-202117:12:37 IST Report Abuse
J.V. Iyer இப்படிதான் இலவசங்களுக்கு மதிப்பு. டாஸ்மாக்கில் வாங்குபவர்களுக்கு தடுப்பொசி போட்டுக்கொண்டால்தான் சரக்கு என்று அறிவிக்கவேண்டும். பிரியாணி கடைகள், ரேஷன் கடைகள் இவைகளில் அமல் படுத்தலாம்.
Rate this:
Cancel
12-ஜூன்-202111:29:42 IST Report Abuse
ஆரூர் ரங் போடும் தடுப்பூசி மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட DOSE கு சற்று குறைவாக சிரின்ஜில் எடுத்து ஊசி போடுவதாக புகார்கள். ஒரு VIAL இல் வரும் மருந்தில் பத்து பேருக்கு பதில் கூடுதலாக ( வேண்டப்பட்ட) ஒருவருக்கு போட்டு விடுகிறார்களாம். இதைக் கண்காணிக்க வேண்டும். புகார்கள் உண்மையெனில் நடவடிக்கை தேவை. DOSE குறைவாக போட்டாலும் எதிர்ப்பு சக்தி வருமா? மருத்துவமனையில்😡 துப்புரவு ஊழியர் ஊசி போட்ட புகார் ? நம்பி ஊசி போட்டுக் கொள்ளும் பயனாளி கதி?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202113:48:11 IST Report Abuse
தமிழவேல் இதில் உண்மை இல்லை... 10 பேருக்கு உலா குப்பியில் "சிலதில்" 11 பேருக்குத் தேவையான மருந்துகள் இருப்பதுண்டு. வெளிநாட்டு ஊசிகளிலும் அப்படிதான் (10 பேர் ஊசிகளில் உண்டு 5 பேர் ஊசிகளில் அப்படி இல்லை) ....
Rate this:
Cancel
S BASKAR - coimbatore,இந்தியா
12-ஜூன்-202111:19:45 IST Report Abuse
S BASKAR ஒரு பாட்டில் ஐ அதை 10 பேருக்கு போடலாம் அல்லது 20 பேருக்கு போடலாம் . ஆனால் அதை விட குறைந்த அளவு மக்கள் வந்தால் மீதி மருந்து வீண் . ஊசி போட ஆன்லைன் இல் பதிய சொல்வதைவிட நேரடியாக வரச்சொல்லி ஒரு பாட்டில் ஐ ஓபன் செய்தால் எத்தனை நபருக்கு போடமுடியுமோ அத்தனை நபர் வந்த பின் ஓபன் செய்தால் வீணாவதை தடுக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X