90 ஒளியாண்டுகள் தொலைவில் தண்ணீர், மேகம் கொண்ட புதிய கிரகம்..!

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (21) | |
Advertisement
தென் கலிஃபோர்னியா: அண்டத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. நமது சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வரும் நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் 'டிஓஐ 1231 பி' என்கிற புதிய கிரகத்தை கண்டுபிடித்தது. இந்த கிரகம் பூமியைக் காட்டிலும் மூன்றரை மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளது. நெப்டியூன் கிரகத்தின் மறு

தென் கலிஃபோர்னியா: அண்டத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. நமது சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வரும் நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் 'டிஓஐ 1231 பி' என்கிற புதிய கிரகத்தை கண்டுபிடித்தது. இந்த கிரகம் பூமியைக் காட்டிலும் மூன்றரை மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளது. நெப்டியூன் கிரகத்தின் மறு உருவம் என்றும் கூறியுள்ளது.latest tamil newsஇதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் பூமியைப் போலவே இந்த கிரகத்தில் தண்ணீர் மற்றும் மேகங்கள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரெட் டுவார்ஃப் எனப்படும் சிவப்பு குள்ளன் என்கிற நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது இந்த கிரகம். சூரியனை விட அளவில் சிறியதான இந்த சிவப்பு குள்ளன் நட்சத்திரத்துக்கு சூரியனைவிட வயது அதிகம்.

சிவப்பு குள்ளன் நட்சத்திரம் இருக்கும் பகுதியே குளுமையானது என்பதால் இந்த புதிய கிரகமும் குளுமை நிறைந்தது. இந்த கிரகத்தின் தட்பவெட்பம் அறிய பார்கோட் பயன்படுத்தப்படுகிறது.இந்த கிரகத்தில் ஹைட்ரஜன் வாயு அணுக்கள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்கிபோல சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலமாகவே இந்த கிரகத்தை காண முடியும்.


latest tamil newsதென் கலிபோர்னியா மாகாணத்தில் நாசா விஞ்ஞானி டாக்டர் ஜெனிபர் பார்ட் தலைமையில் விஞ்ஞானிகள் இந்த கிரகத்தை ஆய்வு செய்து வருகின்றனர். நியூ மெக்சிகோ பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் டிஓஐ 1231 பி கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து முன்னதாக பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murphys law -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூன்-202114:03:59 IST Report Abuse
murphys law Ethana jenmam yduthalum ippadiye kandupuduchikie iruka vendiyadhu dhaan.oru naya paisavyku use illadga velai.
Rate this:
Cancel
பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
12-ஜூன்-202113:31:38 IST Report Abuse
பிஞ்சதலையன் ஒன்னு புரியவே மாட்டேங்குது எனக்கு ஒரு ஒளி வருடம் = 9,5 லட்சம் கிலோ மீட்டர் ஒரு வருஷத்துக்கு இப்படி கணக்கு பன்னுனா இவனுக சொல்றத பார்த்தா சில கோடி கோடி கிலோ மீட்டருக்கு அப்பால இருக்கறதா சொல்லபடுற விஷயத்தை எப்படி / எத்தை வெச்சு கண்டுபிடிக்கறானுங்கோ அது எப்படி இம்புட்டு தூரமா இருக்கற விஷயத்தை ??
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
12-ஜூன்-202115:49:42 IST Report Abuse
Pannadai Pandianஒளி ஒரு நிமிடத்துக்கு 1,86,000 கிலோமீட்டர் பாய்கிறது. ஆண்டி முத்து ராசா திகுடுதித்தமும் 186000 லட்சம் கோடி. ஏதோ இடிக்குதே...
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
12-ஜூன்-202119:04:24 IST Report Abuse
சோணகிரி அப்ப தீயமுக அடிச்சது ஒளியாண்டு கொள்ளைன்னு சொல்லுங்க... விஞ்ஞான ஊழல் கட்சிங்குறது சரியாத்தான் இருக்கு......
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
12-ஜூன்-202112:53:21 IST Report Abuse
Sami Sam பூமியையும் சேர்த்து 14 உலகங்கள் உள்ளன நமது பூமியை பூலோகம் என்று சொல்லப்படுகிறது நாம் வாழும் பூமிக்கு ஒரு நிலவும் சூரியனை சுற்றும் பூமி போல கிரகங்களும் நட்சத்திர மணடலமும் உள்ளது போல் ஒவ்வொவரு உலகங்களுக்கும் சில மாறுபாடுகளுடன் அனைத்தும் உள்ளன என்றும் செவ்வாய் கிரகத்தை பூமி புத்திரன் என்றும் முன்னோர்கள் சொல்லி யிருக்கிறார்கள் அதாவது பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் நாம் வாழும் பூமியிலிருந்து பிரிந்து சென்றதுதான் செவ்வாய் எனவே செவ்வாயில் பூமியை போல் அனைத்து உள்ளதாக தோன்றும் ஆனால் செவ்வாய் சூரியனுக்கு அருகாமையில் இருப்பதால் அனைத்தும் சூரிய வெப்பத்தால் அழிக்கப்பட்டுவிட்டது
Rate this:
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
18-ஜூன்-202116:34:03 IST Report Abuse
Ramuநல்ல தகவல். ஆனால் செவ்வாய் சூரியனுக்கு அருகாமையில் இல்லை, பூமியை விட தூரம் அதிகம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X