மங்களூருவில் இலங்கை தமிழர்கள் கைது

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
மங்களூரு ; ஒன்றரை மாதமாக மங்களூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 38 இலங்கை தமிழர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் வெளிநாட்டு பிரஜைகள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக சி.சி.பி. எனும் மத்திய குற்றவியல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நகர் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி கண்காணித்து வந்தனர். இதற்கிடையில்

மங்களூரு ; ஒன்றரை மாதமாக மங்களூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 38 இலங்கை தமிழர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.latest tamil news
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் வெளிநாட்டு பிரஜைகள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக சி.சி.பி. எனும் மத்திய குற்றவியல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நகர் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி கண்காணித்து வந்தனர். இதற்கிடையில் நகரின் இரண்டு வீடுகளில் 38 இலங்கை தமிழர்கள் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சி.சி.பி. போலீசார் நேற்று கைது செய்தனர்.இது குறித்து மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் செய்தியாளர்
களிடம் நேற்று கூறியதாவது:

மார்ச் 17ல் இலங்கையிலிருந்து 39 தமிழர்கள் புறப்பட்டு கடல் மார்க்கமாக தமிழகத்தின் துாத்துக்குடிக்குள் நுழைந்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பாதுகாப்பு காரணமாக பஸ்கள் மூலம் ஒன்றரை மாதங்களுக்கு முன் பெங்களூரு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மங்களூரு அழைத்து வந்துள்ளனர்.
இரண்டு லாட்ஜ் மற்றும் இரண்டு வீடுகளில் தங்கியிருந்த 38 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் இலங்கைக்கே சென்று விட்டதாக கூறினர்.
ஆனாலும் அவரை தேடி வருகின்றோம். கனடாவில் கூலி வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமிருந்து ௬ லட்சம் ரூபாய் முதல் ௧௦ லட்சம் ரூபாய் வரை இலங்கை ஏஜன்ட்கள் பெற்றுள்ளனர்.


latest tamil newsமங்களூரிலிருந்து கள்ள படகுகள் மூலம் கனடா செல்ல திட்டமிட்டிருந்தாக தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் பாஸ்போர்ட் கிடையாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கைது செய்துள்ளோம். வெவ்வேறு கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்.
இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மங்களூருவை சேர்ந்த ஆறு பேரை பிடித்து அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


கள்ளப்படகில் பயணம்: இந்தியா வந்தவர்கள்


மதுரை ; இலங்கையில் இருந்து கனடா நாட்டுக்கு செல்ல கள்ளப்படகில் துாத்துக்குடி வழியாக மதுரை வந்து தங்கியிருந்த 23 பேர், ஏஜன்ட் ஒருவர் என 24 பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த சிலர், மதுரை கப்பலுாரில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக 10 நாட்களாக தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனை செய்ததில் 2 சிங்களர்கள் உட்பட 21 இலங்கை தமிழர்கள் இருந்தனர். விசாரணையில், கனடா நாட்டுக்கு தங்களை அனுப்புவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மதுரை கூடல்நகர் அசோக்குமார் தங்க வைத்ததாக கூறினர். அசோக்குமார் தலைமறைவானார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 23 பேர், ஏஜன்ட் ஒருவர் என 24 பேரை நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: கனடா நாட்டில் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு விசா தருவது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்கள் செய்கின்றனர். அவர்களிடம் வேலை செய்ய 23 பேர் விரும்பி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அசோக்குமார் தொடர்பு கொண்டுள்ளார். இவர் சகோதரி சியாமளா தேவி இலங்கை தாதா அங்கொடா லொக்கா இறந்த விவகாரத்தில் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக கைதானவர்.
இவர்களின் குடும்பத்திற்கும், இலங்கை தமிழர்களுக்கும் நீண்டகால தொடர்பு உண்டு. அதன் அடிப்படையில் 23 பேரை சட்ட விரோதமாக அசோக்குமார் அழைத்து வந்துள்ளார். சில போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம். அசோக்குமாரிடம் விசாரித்தால் முழுமையான விபரங்கள் தெரியவரும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
16-ஜூன்-202106:46:12 IST Report Abuse
NARAYANAN.V கரைவேட்டி கமிஷன் ஏஜெண்டுகள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel
RB Max - Jaffna,இலங்கை
13-ஜூன்-202100:29:32 IST Report Abuse
RB Max இவர்கள் பேராசை பிடித்தவர்கள். மேற்கத்தைய நாட்டு மோகத்தால் குறுக்கு வழியில் என்ன விலை கொடுத்தும் தாய்நாட்டை விட்டு செல்ல துணிந்தவர்கள்.. சட்டப்டி தண்டிக்கப்பட வேண்டும்... என்ன வளம் இல்லை இவர்கள் தாய்நாட்டில்...
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
13-ஜூன்-202109:48:18 IST Report Abuse
Pannadai Pandianசிலோன்காரன் எல்லாம் துரோகிகள் தான்..... தூக்கிலிட்ட ஏணியை எட்டி உதைப்பார்கள்........
Rate this:
Cancel
12-ஜூன்-202117:16:41 IST Report Abuse
வாஸ்ஸுதேவன் வணக்கம். மங்களூருக்கு ஏன் அழைச்சுக்கிட்டு போனாங்க. தமிழகம் தான் சேஃப்டி. அப்படியே மாட்டினாலும் காப்பாத்த ஆளுங்க இருக்காங்களே. எங்க உதார் தமிழ் நாட்டோட சரி. சவுண்டு குடுப்போம் அது வேற.தப்பு பண்ணிட்டேங்களேப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X