சோனியா ராகுல் பொறுப்புக்கு வந்த நாள் முதல் அந்தக்கட்சி இப்படித்தான் கலகலத்துப் போய் உள்ளது...| Dinamalar

சோனியா ராகுல் பொறுப்புக்கு வந்த நாள் முதல் அந்தக்கட்சி இப்படித்தான் கலகலத்துப் போய் உள்ளது...

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (22)
Share
காங்கிரஸ் போன்ற ஒரு அரசியல் கட்சி, தன் போக்கை மறந்து, வெற்று பாராட்டு கோஷங்களுக்கு மயங்கி, அதன் தலைவர்கள் தங்கள் சொந்த நலனை மட்டுமே கருதி செயல்பட்டால், அங்கிருக்கும் நல்ல தலைவர்கள், உண்மையான தேசிய கட்சியான பா.ஜ.,வை நோக்கி வரத்தான் செய்வர்.- தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை'காங்., காலாவதியாக போகிறது என்பதற்கான காரணமும் நீங்கள் கூறியது தான். சோனியா, ராகுல்
சோனியா ராகுல் பொறுப்புக்கு வந்த நாள் முதல் அந்தக்கட்சி இப்படித்தான் கலகலத்துப் போய் உள்ளது...

காங்கிரஸ் போன்ற ஒரு அரசியல் கட்சி, தன் போக்கை மறந்து, வெற்று பாராட்டு கோஷங்களுக்கு மயங்கி, அதன் தலைவர்கள் தங்கள் சொந்த நலனை மட்டுமே கருதி செயல்பட்டால், அங்கிருக்கும் நல்ல தலைவர்கள், உண்மையான தேசிய கட்சியான பா.ஜ.,வை நோக்கி வரத்தான் செய்வர்.
- தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை


'காங்., காலாவதியாக போகிறது என்பதற்கான காரணமும் நீங்கள் கூறியது தான். சோனியா, ராகுல் பொறுப்புக்கு வந்த நாள் முதல், அந்த கட்சி இப்படி தான் கலகலத்து போய்விட்டது...' என, சொல்ல துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை அறிக்கை.காங்., முன்னணி தலைவராக இருந்த ஜிதின் பிரசாதா, பா.ஜ.,விலிருந்து கிடைத்த, 'பிரசாதத்தால்' கட்சி தாவினாரா அல்லது வரவிருக்கும் உ.பி., சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, கட்சி மாறும், 'டீலு'க்கு அவர் சம்மதித்தாரா என்பது தெரியவில்லை.
- காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல்


'கட்சி மாறும் பலரும், நீங்கள் சொல்லும் பிரசாதத்திற்காக தான் மாறியுள்ளனரா...' எனக் கேட்க தோன்றும் வகையில், காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அறிக்கை.தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி கட்டணத்தை மோடி அரசு அறிவித்திருக்கிறது. 'கோவிஷீல்டு' 780 ரூபாய், 'கோவாக்சின்' 1,410 ரூபாய், 'ஸ்புட்னிக் - வி' 1,145 ரூபாய். ஒரே தடுப்பூசி மூன்று விலை. இரண்டு 'டோஸ்' போட, இரு மடங்காக விலை கூடும். பிரதமர் மோடி யாருக்காக ஆட்சி நடத்துகிறார்?
- தமிழக காங்., ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா


latest tamil news
'லாரி டயர் எல்லாம் ஒன்று போலத் தான் இருக்கும். கம்பெனியை பொறுத்து, தரத்தை பொறுத்து விலை வித்தியாசம் இருக்குதுல்ல. அதுபோல தான்...' எனக் கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை.முன்னாள் முதல்வர், தி.மு.க., தலைவர் கருணாநிதி கடைசி காலம் வரை, மத்திய அரசு என மட்டுமே அழைத்து வந்தார். அவருக்கு இல்லாத தமிழ் பற்றா; தெரியாத அரசியல் அமைப்பு சட்டங்களா? தன் தலைவரை பின்பற்றாத ஒரே கட்சி, தி.மு.க., மட்டும் தான்.
- அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா


'அப்பாவுக்கே பாடம் சொன்ன சுப்பையாக்களாக இருக்க கூடும். அதனால் தான், ஸ்டாலின் அரசு ஒன்றியம் என்றழைக்கிறது...' என, சொல்ல தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா அறிக்கை.பெண் குழந்தைகள் கையில் மொபைல் போனை கொடுக்க கூடாது. அந்த போனை வைத்து இளைஞர்களுடன் பேசி, பொழுதை கழிக்கும் அவர்கள், பின் அவர்களுடன் ஓடியும் போய் விடுகின்றனர்.
- உ.பி., பெண்கள் கமிஷன் உறுப்பினர் மீனாகுமாரி


'இப்படி வித்தியாசமாக யோசிப்பதால் தான், உ.பி., மாநில பெண்களை காப்பாற்றும் பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தலையெழுத்து...' என, கூறத் துாண்டும் வகையில், உ.பி., பெண்கள் கமிஷன் உறுப்பினர் மீனாகுமாரி பேட்டி.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X