எச் 1 பி விசாவுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்| Dinamalar

'எச் 1 பி' விசாவுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (2)
Share
வாஷிங்டன்: 'அமெரிக்காவில், 'எச் 1 பி' விசா வழங்க, முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்படுகின்றன' என, அந்நாட்டின் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, எச் 1 பி மற்றும் எச் 4 ஆகிய விசாக்கள் வழங்கப் படுகின்றன.இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் தான், இந்த விசாவால்
எச்1பி, விசா, கட்டுப்பாடுகள், நீக்கம், அமெரிக்கா

வாஷிங்டன்: 'அமெரிக்காவில், 'எச் 1 பி' விசா வழங்க, முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யப்படுகின்றன' என, அந்நாட்டின் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு, எச் 1 பி மற்றும் எச் 4 ஆகிய விசாக்கள் வழங்கப் படுகின்றன.இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் தான், இந்த விசாவால் அதிகம் பயனடைந்தனர்.அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், எச் 1 பி விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதையடுத்து, எச் 1 பி விசா வழங்க, டிரம்ப் இடைக்கால தடை விதித்தார்.அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின், இந்த விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என அறிவித்திருந்தார்.


latest tamil news




இந்நிலையில், அமெரிக்க குடியேற்றத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எச் 1 பி விசா தொடர்பாக, முன்னாள் அதிபர் டிரம்ப் பிறப்பித்த கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X