பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து குறையுது தினசரி கோவிட் பாதிப்பு

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,59,155 ஆனது. கடந்த 70 நாளுக்கு பின்னர், கோவிட் தொற்றினால்,
இந்தியாவில் தொடர்ந்து குறையுது தினசரி கோவிட் பாதிப்பு

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,93,59,155 ஆனது. கடந்த 70 நாளுக்கு பின்னர், கோவிட் தொற்றினால், குறைந்தளவு பேர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,21,311 பேர் நலமடைந்து வீடு திரும்பினர். இதனால், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,79,11,384 ஆனது. தற்போது 10,80,690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news




கடந்த 24 மணி நேரத்தில்4,002 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 3,67,081 ஆனது

தற்போது வரை 24,96,00,304 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X