தென் ஆப்பிரிக்காவில் கோவிட் 3வது அலை தொடக்கம்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும்

பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவில் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.latest tamil newsதென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.


latest tamil news
தென் ஆப்பிரிக்காவில் கோவிட் 3வது அலை தொடங்கியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,100 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு நீடிப்பதால் நிலைமை கவலையளிக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
12-ஜூன்-202119:48:30 IST Report Abuse
spr "கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்" பழைய தடுப்பூசியை பயன்படுத்தினால் தொற்று குறையுமென்றால் இதனை மூன்றாவது அலை என்று சொல்லி மக்களை அச்சுறுத்துவது சரியா? இது முந்தைய தொற்றின் தொடர்ச்சியே இப்பொழுது கண்டுபிடிப்பது தீவிரமாக நடப்பதால் அறியப்படுகிறது உலகில் இன்றைய காலகட்டத்தில் அமேரிக்கா உட்பட 16 நாடுகள் பையோ கெமிக்கல் போர்க்கருவிகளைக் குறித்து ஆராய்ச்சி செய்கின்றன (Only 16 countries plus Taiwan have had or are currently suspected of biological weapons programs: Canada, China, Cuba, France, Germany, Iran, Iraq, Israel, Japan, Libya, North Korea, Russia, South Africa, Syria, the United Kingdom and the United ஸ்டேட்ஸ்) கொள்ளையடிப்பதில் எப்படி நம் அரசியல்வியாதிகள் வேற்றுமை பாராமல் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவி கொள்ளையடிக்கிறார்களோ அது போல இந்த விவகாரத்தில் எல்லா நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர், ஆராய்ச்சிகளின் வழிமுறைகளை விவாதித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் அதில் அமேரிக்கா மற்றும் சீனா கூட்டாக பரிமாற்றங்களை செய்து கொள்கின்றன என்று அமெரிக்க செய்தித்தாள்கள் சொல்கின்றன எனவே இந்த போர்க்கருவிகளை கட்டுப்படுத்தும் ஐ நா சபை உண்மையாக முயற்சி எடுத்தாலொழிய இந்த பிரச்சினை யாரால் உருவானது என்று சொல்வது கடினம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜூன்-202117:02:46 IST Report Abuse
J.V. Iyer போன மச்சான் திரும்பிவந்தான்.. என்று.. மூன்றாவது, நான்காவது என்று முடிவே கிடையாதா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-ஜூன்-202111:46:52 IST Report Abuse
Ramesh Sargam அமெரிக்காவை தவிர, மற்ற எந்த நாடுகளும் சீனாவை எதிர்ப்பதாக தெரியவில்லை இந்த பெரும் தொற்றை பரப்பியதற்கு. பாதிக்கப்பட்ட அணைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து ஒரு கடுமையான எச்சரிக்கை சீனாவிற்கு கொடுக்கவேண்டும். மேலும், முந்தைய அமெரிக்கா அதிபர் டிரம்ப் கேட்டதுபோல், சீனாவிடமிருந்து ஒரு பெரும் தொகை நிவாரணமாக கேட்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X