பொது செய்தி

இந்தியா

கோவிட் 2வது அலைக்கு 719 மருத்துவர்கள் உயிரிழப்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் தொற்றின் 2வது அலைக்கு இந்தியா முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாவது:கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகி கடுமையாக போராடி

புதுடில்லி: கோவிட் தொற்றின் 2வது அலைக்கு இந்தியா முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாவது:கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகி கடுமையாக போராடி வருகின்றனர்.
தொற்று எதிராக தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களில் தொற்று பாதித்த 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.



latest tamil news




இதில், பிகாரில் அதிகபட்சமாக 111 மருத்துவர்களும், டில்லியில் 109 மருத்துவர்களும், உ.பி.,யில் 79, மேற்கு வங்கத்தில் 63, ராஜஸ்தானில் 43, ஜார்கண்ட் மற்றும் காஷ்மீரில் 39, ஆந்திராவில் 35, தெலங்கானாவில் 36, குஜராத்தில் 37, ஒடிசாவில் 28, மகாராஷ்டிராவில் 23, தமிழகத்தில் 21, மத்திய பிரதேசத்தில் 16, அசாம் 8, கர்நாடகாவில் 9, கேரளாவில் 24, மணிப்பூர், சத்தீஸ்கரில் தலா 5, ஹரியானா, பஞ்சாபில் தலா 3 பேர், கோவா, திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும், பாண்டிச்சேரி 1 ஒருவர் என 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




மருத்துவர்கள் சங்கம் அதில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின் இறப்பு பதிவை மட்டும் வைத்தே இந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
12-ஜூன்-202123:11:23 IST Report Abuse
Mohan மருத்துவரோ முடி திருத்துவரோ உயிர் ஒன்றேதான். அனைத்து ஆன்மாக்களும் சாந்தி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
12-ஜூன்-202120:30:15 IST Report Abuse
J. G. Muthuraj இவர்கள் எல்லோருக்கும் மொத்தமாக ஒரு பெரிய 5 மாடி மணிமண்டபம் பொது மக்கள் பார்வைக்கென மத்திய அரசு கட்டவேண்டும். தலைமுறைகள் அவர்களை நினைத்து பார்க்க வேண்டும்.....
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூன்-202119:29:57 IST Report Abuse
தமிழவேல் மருத்துவர்கள் அனைவரும், நல்ல வேலையாக இரண்டாவது அலைக்கும் முன்பே தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர், இல்லைஎன்ற்றால் இன்றய நிலவரத்தில் எண்ணிப் பார்க்க முடியாது என்று கூறினாரே மோடிஜி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X