பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கை தாண்டும் குறுவை சாகுபடி: முதல்வர் ஸ்டாலின்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் ஸ்டாலின், இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், 5.12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலைக்குள் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும்.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் ஸ்டாலின், இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், 5.12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலைக்குள் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும்.



latest tamil news


மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தார் ஸ்டாலின்



மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன், 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதற்கு, அணையில் குறைந்த பட்சம், 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும். நேற்று, அணை நீர்மட்டம், 96.80 அடியாக இருந்தது.


latest tamil news



இதனால், டெல்டா குறுவை சாகுபடிக்கு, இன்று காலை 11.20 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினார். நிகழ்ச்சியில் நீர் வள துறை அமைச்சர் துரைமுருகன், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிடோர் பங்கேற்றனர்.



இதன் பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: காவிரியில் தடையின்றி தண்ணீரை பெற மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளேன். குறுவை சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே அரசின் நோக்கம். விதைநெல் உரம் பூச்சி கொல்லி மருந்து தேவையான அளவு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி நிச்சயம் குறுவை சாகுபடி இருக்கும்.
10 ஆண்டுகளுக்குள் நீர் மேலாண்மையில் தன்னிறைவு என்பதற்கான நடவடிக்கை துவங்கியது.முழு ஊரடங்கால் பரவல் மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வந்துள்ளது. மாவட்டங்களில் பரவல் குறைந்து உள்ளது.தமிழகத்திற்கு அதிக தடுப்பூசி வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
12-ஜூன்-202122:51:34 IST Report Abuse
தத்வமசி இவர் என்ன செய்தார் ? ஒன்றுமில்லை. சிக்சர் அடிக்க வந்துவிட்டார்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
12-ஜூன்-202122:14:02 IST Report Abuse
sankaseshan நதியி ல் வரும் தண்ணீரால் குளித்து குடித்து விளையும் பயிரை உண்டு நதியை பழிக்க வேண்டாம் நன்றி மறப்பது நன்றன்று
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
12-ஜூன்-202120:14:04 IST Report Abuse
unmaitamil எடப்பாடி ராசியால் அணையில் நீர் நிரம்பியுள்ளது, தற்போது நல்ல அறுவடையும் உள்ளது. எடப்பாடியின் நல்ல மனசு, நல்ல பலன். இப்போதே எல்லோரும் மேட்டூர் அணை நிரம்பியதை நன்கு பார்த்துக்கொள்ளவும் இனி அடுத்த ஐந்து வருஷத்திற்கு அணையில் தண்ணீர் நிரம்பாது. தீய சக்தி திமுக ராசி அப்படி. பாவம் ஓட்டுப்போட்டு மக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X