சீனாவில் மீண்டும் தலைகாட்டும் கோவிட்: புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில் வூஹான் மாகாணத்தில், கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், கோவிட் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சில மாதங்களில், கோவிட் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக சீனா அறிவித்தது. ஆனால், 19 மாதங்களுக்கு மேலாகியும் இந்த பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் விடுபடவில்லை. குறிப்பாக, பெருந்தொற்றின் 2வது மற்றும் 3வது அலையால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள்

பீஜிங்: சீனாவில் வூஹான் மாகாணத்தில், கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், கோவிட் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சில மாதங்களில், கோவிட் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக சீனா அறிவித்தது. ஆனால், 19 மாதங்களுக்கு மேலாகியும் இந்த பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் விடுபடவில்லை. குறிப்பாக, பெருந்தொற்றின் 2வது மற்றும் 3வது அலையால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.latest tamil news
இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கோவிட் தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.


latest tamil news
இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,394 ஆக உயர்ந்துள்ளது; இதுவரை 4,636 பேர் உயிரிழந்து உள்ளனர். இது தவிர நேற்று ஒரே நாளில், 27 பேருக்கு அறிகுறி இல்லாத தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
13-ஜூன்-202112:12:12 IST Report Abuse
வந்தியதேவன் புதுசா... வீரியமிக்க கொரோனா...வ கண்டுபிடிச்சு... உலகத்தை அழிக்கப் பார்க்குறானுங்க...? இதுல இவனுங்க புத்தரை கும்முடுறானுங்க...? இவனுங்க... நாட்டுக்கும் அடிமையா வேலை செய்ய போகுற.... இந்திய தேச பக்திகாரனுங்கள என்னத்த சொல்றது... இதை நான் சொன்னா, என்னை தேச விரோதி... ங்குறானுங்க..? பணத்துக்காக, தன் தாய்நாட்டின் எதிரி நாட்ல போய் வேலை செய்யுறானுங்களே.... அவனுங்க மிருகமா? ராட்சசனா? துரோகியா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... மனுஷ...ன்னா தாய்ப்பாசம், மண்பாசம், நாட்டுப்பாசம் இருக்கணும்... அது இல்லாதவன்...
Rate this:
Cancel
Karthik - Chennai,இந்தியா
12-ஜூன்-202121:59:59 IST Report Abuse
Karthik Small correction: It is not starting again in China. They are starting it again so that it can spread throughout the world again Many countries are under the control of China now, including Australia, South Africa, Sri Lanka, Pakistan. Second wave is controlled throughout the world. So, Chinese have started it again and they will send their infected people throughout the world to spread it again India should ban all flights to and from China
Rate this:
Cancel
Senthil - Bangalore,இந்தியா
12-ஜூன்-202121:12:58 IST Report Abuse
Senthil எல்லாம் கண்துடைப்பு , இப்பொழுது உலகம் முழுதும் சீனா லேப் இல் இருந்து தான் corona பரவியது என்ற உண்மை பரவி வருவதால் , அதை மறைக்க , இதோ எங்களுக்கும் corona என பொய் செய்தி பரப்புகிறான் , top virologist சொன்னது , corona வை இவர்கள் வெளியிடும் முன்பே , இவர்கள் corona வுக்கு மருந்து கண்டுபிடித்து இருந்தார்கள் , அதனால் தான் corona தோன்றிய சீனா வில் பாதிப்பு இல்லை , எப்படி சீனா உலகத்தை ஏமாற்றி இருக்கிறது , நம்பவே முடிய வில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X