பஞ்சாபில் அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி உறுதியானது| Dinamalar

பஞ்சாபில் அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கூட்டணி உறுதியானது

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (4)
Share
சண்டிகர்: பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிரோண்மனி அகாலிதளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ( 2022) தேர்தல் நடக்கிறது. பஞ்சாப்பில் பிரதான எதிர்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி , முன்னர் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு
SAD, BSP , alliance,Punjab, Assembly polls, பஞ்சாப், சிரோண்மனி அகாலிதளம், அகாலிதளம், மாயாவதி, பகுஜன் சமாஜ், கூட்டணி,சுக்பீர்சிங்,

சண்டிகர்: பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சிரோண்மனி அகாலிதளமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ( 2022) தேர்தல் நடக்கிறது. பஞ்சாப்பில் பிரதான எதிர்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி , முன்னர் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியிலிருந்து விலகியது. இதையடுத்து, பஞ்சாப் சட்டசபைக்கு 2022ல் நடக்க உள்ள தேர்தலில் உ.பி.,யின் பிரதான எதிர்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.


latest tamil news



இது தொடர்பாக சிரோண்மனி அகாலிதளம் கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் நிருபர்களிடம் பஞ்சாப் அரசியலில் புதிய நாள் துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் பொது செயலர் சதீஷ் சந்திர மிஸ்ரா கூறுகையில், இன்று வரலாற்று சிறப்பு மிக்கநாள். பஞ்சாப் அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும். மற்ற தொகுதிகளில் சிரோண்மனி அகாலிதளம் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மாயாவதி கட்சி போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. இதன்படி, கர்தார்பூர் சாஹிப், ஜலந்தர் மேற்கு, ஜலந்தர் வடக்கு, பக்வாரா, ஹோஷியாப்பூர் நகர், தசுயா, சம்கவுர் சாகிப், பஸ்ஸி பதனா, சுஜான்பூர், மொஹாலி, அமிர்தசரஸ் வடக்கு மற்றும் அமிர்தசரஸ் மத்தி உள்ளிட்ட 20 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட உள்ளது.

கடந்த தேர்தல்களில் பா.ஜ., உடன் கூட்டணி வைத்திருந்த சிரோன்மணி அகாலிதளம், அக்கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X