காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி| Dinamalar

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (5)
Share
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தின் ஆரம்போரா பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர். 2 போலீசார் காயமடைந்தனர். மேலும் 2 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்த
காஷ்மீர், பயங்கரவாதிகள், உயிரிழப்பு, பலி,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தின் ஆரம்போரா பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர். 2 போலீசார் காயமடைந்தனர்.
மேலும் 2 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X