'டெல்டா' வைரஸ் 60% அதிகமாக பரவக்கூடியது: இங்கிலாந்தில் ஊரடங்கு நீட்டிப்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
லண்டன்: 'கடந்த ஜனவரி மாதம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கோவிட் வைரசைக் காட்டிலும், டெல்டா வைரஸ் 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது' என, பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் அரசு நேற்று (ஜூன் 11) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் வைரசின் டெல்டா மாறுபாடு, தற்போது ஐரோப்பா

லண்டன்: 'கடந்த ஜனவரி மாதம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கோவிட் வைரசைக் காட்டிலும், டெல்டா வைரஸ் 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது' என, பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் அரசு நேற்று (ஜூன் 11) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news



இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் வைரசின் டெல்டா மாறுபாடு, தற்போது ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கோவிட் வைரசைக் காட்டிலும், டெல்டா வகை 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கிறது.
'தென்கிழக்கு இங்கிலாந்தின் கென்ட் நகரில் அடையாளம் காணப்பட்ட ஆல்பா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது, ​​டெல்டா சுமார் 60 சதவிகிதம் வீடு, சமூகப் பரவலுக்கான அபாயத்துடன் தொடர்புடையது' என, இங்கிலாந்தின் புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news



இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி ஜென்னி ஹாரிஸ், 'நேற்றைய புதிய தொற்று 7,393 ஆக உயர்ந்துள்ளன. இது பிப்ரவரி மாதம் முதல் இல்லாத உச்சமாக உள்ளது. இந்த புதிய வழக்குகளில் 90 சதவீதம் டெல்டா வைரஸ் உட்பட்டவை தான். இதனால், வரும் 21ம் தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றார்.


latest tamil news



பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், 'டெல்டா வகை வைரசின் அதிவேகப் பரவலால், ஜூன் 21ம் தேதி அறிவிக்கப்பட இருந்த ஊரடங்கு தளர்வுகள் நீட்டிக்கப்பட உள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
12-ஜூன்-202123:57:39 IST Report Abuse
கொக்கி குமாரு டெல்டா மாவட்டங்களில் கருணாநிதியின் திருட்டு திமுக ஆதிக்கம் அதிகம். அதனால் டெல்டா வைரஸும் மிக மோசமான வைரஸாக இருக்க வாய்ப்புகள் அதிகம். திருட்டு திமுகவின் குணங்கள் அனைத்தும் டெல்டா வைரஸுக்கு இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். மக்கள் தங்களை டெல்டா வைரஸிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும்.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
13-ஜூன்-202106:39:38 IST Report Abuse
Amal Anandanஇன்னும் ஐந்து வருடங்களுக்கு இப்படி புலம்பியே அனைத்து வியாதிகளும் வரும்....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
12-ஜூன்-202116:38:25 IST Report Abuse
Darmavan இப்போது ராகுல் கான் இடது சாரிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
12-ஜூன்-202114:58:34 IST Report Abuse
raghavan அங்க மக்கள் தொகை 7 கோடி தான். எங்க நிலைமையை நினைச்சு பாருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X