பொது செய்தி

இந்தியா

கறுப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு: ஆக்ஸிஜன், ஆம்புலன்சுக்கு வரிக்குறைப்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டதுடன், ஆம்புலன்ஸ், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, ரெம்டெசிவிர் மருந்துகள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி கவுன்சிலின் 44வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை
GSt, Nirmala sitharaman, Finance Minister, FM,

புதுடில்லி: கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின்- பி மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டதுடன், ஆம்புலன்ஸ், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனை கருவி, ரெம்டெசிவிர் மருந்துகள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 44வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


latest tamil news




latest tamil news




பின்னர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஆம்போடெரிசின்-பி மருந்து மீதான ஜிஎஸ்டி நீக்கப்படுகிறது. கோவிட் சிகிச்சைக்கு தேவையான பெரும்பாலான பொருட்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் மீதான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 12 % ஆகவும், மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன்செறிவூட்டிகள், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க், கோவிட் பரிசோதனை கருவிகள், பல்சி ஆக்சிமீட்டர், வெப்பநிலை பரிசோதனை கருவிகள், ரெம்டெசிவிர் மீதான ஜிஎஸ்டி 12%ல் இருந்த 5 % ஆகவும், சானிடைசர் மீதான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5 % ஆகவும், குறைக்கப்படுகிறது. தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக தொடரும்.


latest tamil news




மருந்துகள், ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், பரிசோதனை கருவிகள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 4 வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THOMAS LEO - TRICHY,இந்தியா
13-ஜூன்-202109:55:23 IST Report Abuse
THOMAS LEO இது நல்ல பிள்ளைக்கு அடையாளம். (அடுத்த வருட மாநில அரசு தேர்தலுக்கு அச்சாரமோ)
Rate this:
Cancel
13-ஜூன்-202106:01:34 IST Report Abuse
ravi chandran கொரோனாவில் செத்த பிணத்திற்கு ஜிஎஸ்டி போடும் ஒரே நல்ல அரசாங்கம்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜூன்-202121:47:23 IST Report Abuse
Pugazh V தமிழக நிதி அமைச்சருக்கு நன்றி. அவரது ஆலோசனை தான் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X