தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் மொபைல்போன் எண் முடக்கம்: பாக்., அறிவிப்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: 'கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும்' என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.கோவிட் பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தடுப்பூசிகள் குறித்துப் பரவிய வதந்திகளை நம்பிய ஒருசிலர் தடுப்பூசியை

இஸ்லாமாபாத்: 'கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும்' என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



latest tamil news




கோவிட் பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தடுப்பூசிகள் குறித்துப் பரவிய வதந்திகளை நம்பிய ஒருசிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்குகின்றனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ள முன் வரவில்லை. இதனால் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வராதவர்களின் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும் என பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது.


latest tamil news




இதேபோல், கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்கும்படி பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
13-ஜூன்-202110:14:25 IST Report Abuse
duruvasar தமிழ் ஊராட்சியில் காந்தி, சமூக ஆர்வலர்கள் போன்ற போராளிகள் தனிமனித சுதந்திரத்தை நசுக்குவதை எதிர்த்து மெரினாவில் போராட்டம் செய்வார்கள். ஆனால் தற்சமய தலைமை ஆட்சி செய்வதால் அரசுக்கு பாராட்டுக்கள் குவியும். ஆதரவு பேரணிகள் நடத்துவார்கள்.
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
13-ஜூன்-202106:43:14 IST Report Abuse
கௌடில்யன் மூணு நிமிஷத்துக்கு மேல மொபைல் போனில் பேசினால் வரி கட்டணும் ..நேற்றைய பாகிஸ்தான் பட்ஜெட் அறிவிப்பு ..
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-ஜூன்-202105:55:35 IST Report Abuse
Loganathan Kuttuva இந்தியாவில் தடுப்பூசி போட்டுகொண்டால் இலவச அரிசி .அங்கே எதிர் கட்சிகள் தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X