பொது செய்தி

இந்தியா

மெஹூல் சோக்சி வழக்கு: சட்ட போராட்டத்திற்கு தயாராகும் மத்திய அரசு, சிபிஐ

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: வைர வியாபாரி மெஹூல் சோக்சி மீதான வழக்கில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என டொமினிக்கா உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஐ.,யும் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2018ல், மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றார்.
 Mehul Choksi,Centre, CBI,Legal Battle, Dominica,

புதுடில்லி: வைர வியாபாரி மெஹூல் சோக்சி மீதான வழக்கில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என டொமினிக்கா உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஐ.,யும் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2018ல், மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு வசித்து வந்த சோக்சி, கடந்த மே 23ல் திடீரென மாயமானார்.

இந்நிலையில், ஆன்டிகுவா அருகே உள் டொமினிக்கா தீவில், போலீசார், சோக்சியை கைது செய்தனர். அவர், கியூபாவுக்கு தப்பியோடும் திட்டத்துடன், டொமினிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, சோக்சி சார்பில் அவரது வழக்கறிஞர்கள், டொமினிக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று டொமினிக்கா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஜாமின் வழங்கினால், சோக்சி தப்பியோடி விடுவார்' என, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதை, சோக்சி வழக்கறிஞர் மறுத்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை, 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சோக்சி தப்பி செல்லும் வாய்ப்பு உள்ளது எனக்கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்

இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் எனக்கூறி மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் சிபிஐ சார்பில் டொமினிக்கா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news



இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்த வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி குறித்து சிபிஐ கவனம் செலுத்தும். வங்கி மோசடி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அந்த அமைப்பு சார்பில் அனுமதி கேட்கப்படும். அதேபோல், வெளியுறவு அமைச்சகம் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவில், சோக்சியின் இந்திய குடியுரிமை பெற்றவர். அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கவில்லை. குடியுரிமையை திருப்பி ஒப்படைக்கும் நடவடிக்கையை முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை வைத்து வாதாட திட்டமிட்டுள்ளது. டொமினிக்கா பிரதமர் ரூஸ்வெல்ட்டும், சோக்சி இந்திய குடிமகன் என தெரிவித்து உள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை மற்றும் சிபிஐக்கு டொமினிக்கா நீதிமன்றம் அனுமதி அளிக்கும்பட்சத்தில், வெளியுறவுத்துறை மற்றும் சிபிஐ சார்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹாரிஸ் சால்வே ஆஜர் ஆவார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூன்-202113:50:49 IST Report Abuse
சந்திரசேகர் இது என்னயா சட்ட போராட்டம்.அவன் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டியதுதானே. கேட்டால் ஜனநாயக நாடு அப்படி இப்படி என்று சொல்வது.பிரதமரை கேவலமாக பேசுவதும் முதலமைச்சரை கேவலமாக பேசுவதும் தான் ஜனநாயகமா?
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஹாரிஸ் - ஹரிஷ் கிறித்துவம் இந்துத்வம் RAMAN RA H MAN தாவிது - தாவூது இதுபோல ஆயிரமாயிரம் சொல்லலாம்
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
13-ஜூன்-202106:18:21 IST Report Abuse
Tamil எல்லாம் கூட்டு களவாணி சும்மா மக்களை ஏமாற்ற நாடகம் அனுப்பிவிட்டது இவர்கள் லோன் அடிச்ச பணத்தில் பங்கு வந்திருக்காது இவனையவுது கூட்டிவருவதாவுது, வந்து மட்டும் என்ன சொல்லுவான் நாடு விட்டு நாடு சென்றதில் பணம் செலவாகிவிட்டது என்று சொல்லுவான். கடந்த 3 வருடம் இந்தியாவில் குஜராத்தி மட்டும் அனைத்து சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது ஷிப்பிங் ஏர்போர்ட் பவர் சமயல் என்னை ( ரேஷன்.கடைகளில் இந் மாதம் கொடுத்தது fortune உட்பட)கடத்தல் வங்கி லோன் கட்டமா ஓடி போவான் அவன் அடிச்ச பணத்துக்காக நஷ்டமான வங்கிகளை லாபத்தில் இயங்கும் வங்கிகளிடம் கோர்த்து விட்டது எந்த மாநிலமாவுது வாயை திறந்தார்களா திருடி சொத்து சேர்த்தவன் எப்படி கேள்வி கேட்பான் ? PTR போன்று லஞ்சம் வாங்காத நபர் தான் கேள்வி கேட்கமுடியும் என்ன அவர் இருக்கும் கட்சி அவரை பேச அனுமதிக்குமா என்பது போக போக தெரியும் மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கவேண்டும் அவர்கள் தான் BJP ஆட்சி செய்ய எண்ணிக்கை இல்லாவிடில் இவர்கள் கட்சியில் இருந்து ஆட்களை அனுப்பி உதவுகிறார்கள், ஒரு எதிர்க்கட்சி 100 ரூபாய் பெட்ரோல் விற்கும் வரை மிச்சர் சாப்பிட்டுவிட்டு 100 ரூபாய் வந்தவுடன்போராட்டம் ஏனென்றால் சமையல் வாய்வு பெட்ரோல் விற்பனை செய்வது இவர்கள் பினாமி எல்லாம் களவாணி தான் இருக்கான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X