பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு தொற்று இல்லை

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கூடலூர்: சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள, ஒன்பது சிங்கங்களுக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.அதன்படி, முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடமிருந்து, கால்நடை டாக்டர் மாதிரிகளை சேகரித்து, அதனை
யானை, கோவிட், பரிசோதனை

கூடலூர்: சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள, ஒன்பது சிங்கங்களுக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

அதன்படி, முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடமிருந்து, கால்நடை டாக்டர் மாதிரிகளை சேகரித்து, அதனை பரிசோதனைக்காக உத்திரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொண்ட சோதனையில், 'முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கும் தொற்று இல்லை' என, உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
13-ஜூன்-202106:16:22 IST Report Abuse
கௌடில்யன் சென்னையில் கொசுக்களுக்கு கோரோனோவா என்று கண்டறிய வேண்டும் ...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
12-ஜூன்-202120:23:41 IST Report Abuse
Ramesh Sargam அடுத்து நமது முதல்வர், ஐந்தறிவு பிராணிகளின் காப்பாளர், முதுமலைக்கு விசிட் செய்வார், பிராணிகளின் நலன் அறிய. ஆமாம், இவர் வண்டலூர் விஜயம் செய்தபிறகு, அங்குள்ள சிங்கங்களுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டதா? அவைகள் நலமாக உள்ளதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X