முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு தொற்று இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு தொற்று இல்லை

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (2)
Share
கூடலூர்: சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள, ஒன்பது சிங்கங்களுக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.அதன்படி, முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடமிருந்து, கால்நடை டாக்டர் மாதிரிகளை சேகரித்து, அதனை
யானை, கோவிட், பரிசோதனை

கூடலூர்: சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள, ஒன்பது சிங்கங்களுக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

அதன்படி, முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடமிருந்து, கால்நடை டாக்டர் மாதிரிகளை சேகரித்து, அதனை பரிசோதனைக்காக உத்திரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொண்ட சோதனையில், 'முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கும் தொற்று இல்லை' என, உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X