பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 15,108 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 15,105 பேரும் மற்ற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 15,108 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 374 பேர் உயிரிழந்து உள்ளனர். 27,463 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 22 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 31 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 15,105 பேரும் மற்ற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 15,108 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 374 பேர் உயிரிழந்து உள்ளனர். 27,463 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 22 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 31 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 82,878 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 15,108 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,39,705 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,97,90,743 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 8,342 பேர் ஆண்கள், 6,766 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,70,546 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,69,121 ஆகவும் அதிகரித்து உள்ளது. 27,463 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,48,352 ஆக உயர்ந்தது.

374 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 130 பேர் தனியார் மருத்துவமனையிலும், 244 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,280 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news





மாவட்டம் வாரியாக படுக்கை விவரம்




Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-ஜூன்-202112:40:23 IST Report Abuse
Sridhar பத்தாயிரத்துக்கு கீழே இருந்த எண்ணிக்கையை இந்தியாவிலேயே அதாவது 'ஒன்றியத்திலேயே' முதல் இடத்திற்கு கொண்டுசென்ற பெருமை இந்த தமிழக ஊராட்சியையே சேரும். இந்த லச்சணத்துல, சாராயக்கடை திறப்பு வேற இத்தனைக்கும் கனிமொழி பேசுனா பேச்ச கேட்கணுமே? தேர்தல்ல ஜெயிச்சு ஆட்சி அமைச்சா, சாராய ஆலைகளையே மூடிடுவாங்கலாம், அண்டை மாநிலங்களுக்கு சப்ளை பண்ணக்கூட விடமாட்டங்களாம் யாருக்குயா ஓட்ட போட்டுருக்காங்க தமிழ் மக்கள்??
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
13-ஜூன்-202108:15:21 IST Report Abuse
duruvasar தொடர்ந்து எண்ணிக்கை விகிதத்தில் தமிழக ஊராட்சி முதன்மை மாநிலமாக உள்ளதை எந்த ஊடகங்களும் எழுத திராணி இல்லாமல் இருக்கிறது. ஒருவேளை இது தான் கூட்டணி தர்மமோ ?
Rate this:
Cancel
rajamani - chennai,இந்தியா
12-ஜூன்-202121:58:10 IST Report Abuse
rajamani வரும் நாட்களில் மீண்டும் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது சாராய கடை முடிதிருத்தூம் கடை அணைத்து கடைகளும் திறக்க படுகின்றது டுடே அனைத்து கடைகளிலும் திறந்து விட்டார்கள் பின்னர் ஊரடங்கு பெயர் அளவில் தான் இருக்கும் அரசு இதை உணர்ந்ததாக தெரியவில்லை மீண்டும் ஒரு கட்டு பாடு வர வாய்ப்புள்ளது மக்கள் அதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்ள வேண்டும் அரசை நம்பி பயன் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X