காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு: நாடகம் ஆடுவதாக இந்தியா பாய்ச்சல்| Dinamalar

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு: நாடகம் ஆடுவதாக இந்தியா பாய்ச்சல்

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (7)
Share
நியூயார்க்: 'பாக்., ஒவ்வொரு முறையும், ஐ.நா., சபை கூட்டங்களில், சம்பந்தம் இல்லாமல் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசி, நாடகம் ஆடுகிறது; இதை, உலக நாடுகள் நன்றாக புரிந்து வைத்துள்ளன. அதனால், பாக்., இனிமேலும், இந்த சபை வாயிலாக சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது' என, இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.,பொதுச் சபை கூட்டம் நடந்தது. இதில்
காஷ்மீர், விவகாரம், பாகிஸ்தான், மீது, குற்றச்சாட்டு!

நியூயார்க்: 'பாக்., ஒவ்வொரு முறையும், ஐ.நா., சபை கூட்டங்களில், சம்பந்தம் இல்லாமல் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசி, நாடகம் ஆடுகிறது; இதை, உலக நாடுகள் நன்றாக புரிந்து வைத்துள்ளன. அதனால், பாக்., இனிமேலும், இந்த சபை வாயிலாக சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது' என, இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.,பொதுச் சபை கூட்டம் நடந்தது. இதில் கடந்த ஆண்டு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மேற்கொண்ட செயல்பாடுகள் தொடர்பான அறிக்கை குறித்த விவாதம் நடந்தது.

அப்போது, ஐ.நா.,வுக்கான இந்திய நிரந்தர துாதுக்குழு ஆலோசகர் ஆர்.மதுசூதனன் பேசியதாவது: அண்டை நாடான பாக்., உட்பட அனைத்து நாடுகளுடன் இயல்பான நட்பு பாராட்டுவதையே இந்தியா விரும்புகிறது.


பிரச்னை

இந்தியா - பாக்., இடையே எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை அமைதியான முறையில் இரு தரப்பும் பேசி தீர்க்க வேண்டும். அதற்கு பயங்கரவாதம், வெறுப்புணர்வு வன்முறை ஆகியவை இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்தகைய சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம் தான் உள்ளது.

பாக்., தங்கள் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான, எந்த வகையான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கும் இடம்அளிக்காமல், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.இந்தியாவில் பார்லிமென்ட் ஒப்புதலுடன், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன; இது, முழுக்க முழுக்க இந்தியாவின் உள் விவகாரம்.

துரதிர்ஷ்டவசமாக, பாக்., ஒவ்வொரு முறையும், ஐ.நா., சபை கூட்டங்களில், சம்பந்தம் இல்லாமல் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசி வருகிறது. தற்போதும் சபையில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து பேசாமல், காஷ்மீர் விவகாரத்தை பேசி, நாடகம் ஆடுகிறது; இதை, உலக நாடுகள் நன்றாக புரிந்து வைத்துள்ளன. அதனால், பாக்., இனிமேலும், இந்த சபை வாயிலாக சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது என்பது மட்டும் நிச்சயம்.


வலியுறுத்தல்

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் செயல்பாடுகள் குறித்து மேலும் ஆழமாக ஆராய்ந்து அறிக்கை வழங்க, ஐ.நா., பொதுச் சபை வலியுறுத்தி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த கோரிக்கையை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் செவிமடுக்காமல் உள்ளது. காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளை பின்பற்றி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவே விரும்புகிறது.

அதனால் இந்த கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்படும், பெரும்பான்மையாக உள்ள உறுப்பு நாடுகளின் கொள்கைகள் பாதிக்கப்படுகின்றன.ஐ.நா.,பொதுச் சபைக்கு அளிக்கும் அறிக்கை, வெறும் சடங்காக இல்லாமல், அதிக அக்கறையுடன் தயாரிக்கப்பட வேண்டியது முக்கியம். அவ்வாறு தயாரிக்கப்படும் என, இந்தியா நம்புகிறது.

ஐ.நா.,வின் முக்கிய பிரதிநிதித்துவ அங்கமாக, பொதுச் சபை விளங்குகிறது. அதன் முக்கிய துவத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையில் இருந்து புரிந்து கொள்ளலாம். எனவே, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டறிக்கை என்பது, சர்வதேச அமைதி, பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள், ஆய்வுகள் உள்ளிட்டவற்றின் ஆழமான அலசலாக இருக்க வேண்டும்.


நடவடிக்கை

ஐ.நா., அமைதிப் படையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறாத உறுப்பு நாடுகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இந்நாடுகள் தங்கள் வீரர்களின் வாழ்வை பணயம் வைத்து, சர்வதேச அமைதிக்கு துணை நிற்கின்றன. அதனால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கும், அமைதிப் படையினரை அனுப்பும் நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X