பிரெஞ்ச் ஓபன்:மகளிர் ஆட்டத்தில் பார்பரா சாம்பியன்| Dinamalar

பிரெஞ்ச் ஓபன்:மகளிர் ஆட்டத்தில் பார்பரா சாம்பியன்

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (1)
Share
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பார்பரா சாம்பியன் பட்டம் வென்றார்.பிரான்சில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லிசென்கோவா, செக்குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்தித்தார். முதல் செட்டை பார்பரா 6-1 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பார்பரா சாம்பியன் பட்டம் வென்றார்.



latest tamil news



பிரான்சில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லிசென்கோவா, செக்குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்தித்தார். முதல் செட்டை பார்பரா 6-1 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பவ்லிசென்கோவா ஆதிக்கம் செலுத்தினார். 5-2 என முன்னிலையில் இருந்த போது, இடது தொடையில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு போட்டியை தொடர்ந்தார். பின் இந்த செட்டை 6-2 என வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். கடைசி செட்டில் பார்பரா 6-4 என வென்றார்.


latest tamil news



ஒரு மணி நேரம், 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பார்பரா 6-1, 2-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக கோப்பை வென்றார். கோப்பை கைப்பற்றிய பார்பரா ரூ. 14.41 கோடி, பவ்லிசென்கோவா ரூ. 6.65 கோடி பரிசு பெற்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X