பாலிடெக்னிக் சேர்க்கையில் தமிழக அரசு மவுனம் கலைப்பு: 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கெடுக்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் சேர்க்கையில் தமிழக அரசு மவுனம் கலைப்பு: 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கெடுக்க முடிவு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:கொரோனா தொற்று பரவலால், அரசு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், பாலிடெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக, தமிழக அரசு மவுனத்தை கலைத்துள்ளது. ''பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை, ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு பள்ளிகள்
பாலிடெக்னிக் ,சேர்க்கை,தமிழக அரசு,மவுனம் கலைப்பு!

சென்னை:கொரோனா தொற்று பரவலால், அரசு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், பாலிடெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக, தமிழக அரசு மவுனத்தை கலைத்துள்ளது. ''பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை, ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாமல், பெரும்பாலான வகுப்புகளுக்கு, 'ஆன்லைன்' முறையில் பாடங்கள் நடத்தப்பட்டன.தொற்று பரவல் கட்டுக்குள் வராததால், ஆண்டு இறுதி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளை நடத்த முடியவில்லை.இதனால், பிளஸ் 2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுஉள்ளது. தேர்வு நடத்தாததால், மதிப்பெண்ணை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


ஆலோசனை

உயர் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கையை எவ்வாறு நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று மவுனம் கலைத்துள்ளது.உயர் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக, முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளுடன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டி:பத்தாம் வகுப்புக்கு தேர்வு நடக்காததால், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1க்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ஒன்பதாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே, பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

அரசு விதித்துள்ள அவகாசத்தை தாண்டிய பிறகும், பாலிடெக்னிக் மாணவர்கள், 'அரியர்' தேர்வை எழுதுவதற்கு அனுமதியும், கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்துவது குறித்து, முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.


பல்கலை பிரிப்பா?

அண்ணா பல்கலையை இரண்டாகப் பிரிக்கும் மசோதாவை, கவர்னரிடம் இருந்து திரும்ப பெறுவதா என்பது குறித்து, முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.தற்போதைய நிலையில், அண்ணா பல்கலை எப்படி செயல்படுகிறதோ, அதன்படியே செயல்படும். மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கும் முன்னர் நடந்ததை போன்றே நடத்தப்படும்; அதில், எந்த மாற்றமும் இல்லை.கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், முன்னர் போலவே மாணவர் சேர்க்கை நடத்தப் படும்.அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரி களில், எட்டு விருப்ப பாடங்கள் பட்டியலில், ஒன்பதாவதாக தமிழ் மொழி பாடமும் இடம் பெறும்.இவ்வாறு பொன்முடி கூறினார்.


'டி.என்.பி.எஸ்.சி., வழியே நியமனம்'

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே, கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனங்களில், பல்வேறு முறைகேடுகள் நடந்து, நீதிமன்றத்திலும், போலீசிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நியமனத்தில் மாற்றம் கொண்டு வர, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, அமைச்சர் பொன்முடி கூறியதாவது:கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி களில் விரிவுரையாளர் நியமனங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக மேற்கொள்ளப் படுகின்றன. இதற்கு பதில், டி.என்.பி.எஸ்.சி., வழியே, புதிய விரிவுரையாளர்கள் நியமனங்களை மேற்கொள்வது குறித்து, முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும்.

சேலம் பெரியார், மதுரை காமராஜர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை போன்றவற்றில், பணி நியமனங்களில், சில தவறுகள் நடந்ததாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், குழு அமைத்து விசாரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X