பொது செய்தி

இந்தியா

ஒரு கோடி 'டோஸ்' தடுப்பூசி பயன்படுத்தாதது கண்டுபிடிப்பு

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், தனியார் மருத்துவமனைகள், ஒரு கோடி, 'டோஸ்' தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பூசி வினியோகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மே மாதம் நாடு முழுதும், 7.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து 'சப்ளை'

புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், தனியார் மருத்துவமனைகள், ஒரு கோடி, 'டோஸ்' தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பூசி வினியோகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.latest tamil newsஅதில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மே மாதம் நாடு முழுதும், 7.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து 'சப்ளை' செய்யப்பட்டது.அதில் தனியார் மருத்துவமனைகளுக்கு, 1.85 கோடி டோஸ் ஒதுக்கப்பட்டது. ஆனால், தனியார் மருத்துவ மனைகள் 1.29 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை மட்டுமே பெற்றுள்ளன.அதிலும், 22 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை, அதாவது ஒதுக்கப்பட்டதில், 17 சதவீத மருந்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. அதன்படி, 1.07 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'தனியார் மருத்துவமனைகள், தடுப்பூசிக்கு அதிக விலை நிர்ணயம் செய்ததும், மக்களிடம்
தடுப்பூசி செலுத்த ஆர்வம் இல்லாததும் தான், தனியாரிடம் தடுப்பூசி தேங்க காரணம். 'பயன்படுத்தாத மருந்தை அரசிடம் திரும்ப அளித்திருந்தால், தடுப்பூசி தட்டுப்பாடு குறைந்திருக்கும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் பிரதமர் மோடி, புதிய தடுப்பூசி கொள்கையை அறிவித்தார். அதன்படி, தடுப்பூசி தயாரிப்பில், 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மக்களுக்கு இலவசமாக வழங்கும்.


latest tamil newsதனியார் மருத்துவமனைகள், 25 சதவீத தடுப்பூசியை கொள்முதல் செய்து, மக்களிடம் தடுப்பூசி செலுத்த கட்டணம் வசூலித்து கொள்ளும்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Believe in one and only God - chennai,இந்தியா
13-ஜூன்-202102:29:38 IST Report Abuse
Believe in one and only God எதுவும் வீணாகவில்லை. அரசு டாக்டர் தனக்கு தெரிந்தவர்களுக்கு புக் பண்ணாமல் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். இது உண்மை. சில இடங்களில் 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கு போட்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
13-ஜூன்-202102:29:35 IST Report Abuse
muthu LET PRIVATE HOSPITAL USE THIS VACCINE TO POOR VILLAGE IN THE FORM OF CAMP AT FREE OF COST IN THE PRESENCE OF VAO RO DHASILDAR. Let govt Counts this expiture under 80G with 100 percent tax benefit as a mutual benefit
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
13-ஜூன்-202102:25:59 IST Report Abuse
muthu புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், தனியார் மருத்துவமனைகள், ஒரு கோடி, 'டோஸ்' தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் இருந்தது தெரியவந்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம், தடுப்பூசி வினியோகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. Let centre govt works out the expiture cost of vaccine labour cost transportation cost etc per camp to inject to poor villagers at free of cost in the presence of health and revenue officials. The worked out cost per camp shall be adjusted by the govt to the hospitals in the form of income tax property tax etc in this worst economical situation
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X