கொரோனா, கறுப்பு பூஞ்சை மருந்து விலை குறைகிறது: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா, கறுப்பு பூஞ்சை மருந்து விலை குறைகிறது: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (10)
Share
புதுடில்லி: மாநில நிதி அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின்படி, கொரோனா மற்றும் கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் மீது விதிக்கப்படும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசிக்கான வரியை குறைக்க, மாநிலங்களுக்கான அமைச்சர்கள் குழு மறுத்துள்ளது.கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக
 குறைகிறது,கொரோனா, கறுப்பு பூஞ்சை, மருந்து விலை

புதுடில்லி: மாநில நிதி அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின்படி, கொரோனா மற்றும் கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் மீது விதிக்கப்படும், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசிக்கான வரியை குறைக்க, மாநிலங்களுக்கான அமைச்சர்கள் குழு மறுத்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலருக்கு, கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படுகிறது.பாதிப்பு அதிகமாக உள்ளதால் கொரோனா தடுப்பூசி, மருந்துகள், சாதனங்களுக்கான, ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய, பல மாநிலங்கள் வலியுறுத்தின. சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.வரியை குறைப்பது தொடர்பான பரிந்துரைகள் வழங்க, சில மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.


ரத்து

அந்தக் குழு அளித்த பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க, கவுன்சிலின் 44வது கூட்டம், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்தது.இதில், மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர், மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் தியாகராஜன் பங்கேற்று மாநில கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

நீண்ட விவாதத்துக்குப் பின், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கள் குறித்து, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:கொரோனா தடுப்பூசிக்கான, 5 சதவீத வரி விகிதம் தொடர்கிறது. அதே நேரத்தில், கறுப்பு பூஞ்சை மருந்துகளுக்கான வரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும், 'ரெம்டெசிவிர்' மருந்துக்கான வரி, 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

ஆம்புலன்சுக்கான வரி, 28ல் இருந்து, 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றுக்கான வரியும் குறைக்கப்படுகிறது. இந்த வரி மாற்றம், இந்தாண்டு, ஆக., 31 வரை அமலில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி செய்யப்பட்டுள்ள வரி மாற்றம்:


கொரோனா தடுப்பூசி

தடுப்பூசிக்கான வரியை குறைக்க பெரும்பாலான மாநிலங்கள் வலியுறுத்திய நிலையில், 5 சதவீத வரியில் எந்த மாற்றமும் செய்ய, அமைச்சர்கள் குழு மறுத்துள்ளது.தடுப்பூசி நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசியில், 75 சதவீதத்தை, ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து, மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. இதற்கான வரி வருவாயில், 70 சதவீதம் மாநிலங்களுக்கு கிடைக்கும்.


மருந்துகள்

கொரோனாவுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கான வரி, 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைகிறது. கறுப்பு பூஞ்சைக்கு வழங்கப்படும், 'டோசிலிஜூமாப், ஆம்போடெரிசின் - பி' மருந்துகளுக்கான, 5 சதவீத வரி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 'ஹெபாரின்' மருந்துக்கான வரி, 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் அனைத்து மருந்துகளுக்கும், அதிகபட்சம் 5 சதவீத வரி மட்டுமே இருக்கும்.


ஆக்சிஜன்

ஆக்சிஜனுக்கான வரி, 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைகிறது. ஆக்சிஜன் செறிவூட்டி, வென்டிலேட்டர் உள்ளிட்ட சில சாதனங்களுக்கான வரியும், 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைகிறது.கொரோனா பரிசோதனை சாதனங்களுக்கான வரியும், 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைகிறது.


மற்றவை

'பல்ஸ் ஆக்சிமீட்டர்' விலையில், ஜி.எஸ்.டி., 12ல் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கிருமி நாசினி, உடல் வெப்பநிலையை கண்டறியும் சாதனங்களுக்கான வரி, 18ல் இருந்து, 5 சதவீதமாக குறையும்.உடல் தகனம் செய்யும் சாதனங்கள், அதற்கான மின்சாரம், எரிவாயு உள்ளிட்டவற்றுக்கான வரியும், 18ல் இருந்து, 5 சதவீதமாக குறைகிறது. ஆம்புலன்சுக்கான வரி, 28ல் இருந்து, 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.


9 ஆய்வு கட்டுரைகள்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த,'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரித்துள்ள, 'கோவாக்சின்' உள்ளிட்ட இரண்டு தடுப்பூசிகள் தற்போது நம் நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து, சிலர் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து, கடந்த 12 மாதங்களில் உலகெங்கும் பிரபலமாக உள்ள, ஐந்து சர்வதேச மருத்துவ இதழ்களில் ஒன்பது ஆய்வு மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுவரை, முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையின் முழு தகவல்களும், மூன்றாம் கட்ட பரிசோதனையின் பகுதி தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனையின் முழு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.'ஆல்பா, டெல்டா' போன்ற பல, உருமாறிய வைரசுக்கு எதிராக, கோவாக்சினின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இதைப் பயன் படுத்த, இதுவரை 13 நாடுகள் அனுமதி அளித்துள்ளன. மேலும், 60 நாடுகளில் பரிசீலனையில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X