பொது செய்தி

தமிழ்நாடு

பரம்பிக்குளத்திற்கு தண்ணீர் திறப்பு: பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
வால்பாறை:சோலையாறு அணையில் இருந்து, மூன்றரை மாதத்திற்குப்பின் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பருவமழையின் போது, சோலையாறு அணை நிரம்பியதும், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கும்; காடம்பாறை அணை நிரம்பியதும், அப்பர் ஆழியாறு வழியாக ஆழியாறு அணைக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கோவை,
 பரம்பிக்குளத்திற்கு தண்ணீர் திறப்பு: பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி

வால்பாறை:சோலையாறு அணையில் இருந்து, மூன்றரை மாதத்திற்குப்பின் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பருவமழையின் போது, சோலையாறு அணை நிரம்பியதும், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கும்; காடம்பாறை அணை நிரம்பியதும், அப்பர் ஆழியாறு வழியாக ஆழியாறு அணைக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச்சேர்ந்த, 3.5 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.சோலையாறு அணையின் நீர்இருப்பு குறைந்ததால், பிப்., மாதம் முதல் மானாம்பள்ளி பவர்ஹவுசில் மின் உற்பத்தி செய்யப்படவில்லை. இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.இதனால், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மூன்றரை மாதத்திற்கு பின், நேற்று முதல் மானாம்பள்ளி பவர்ஹவுசில், 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 50.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 232 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.அணையிலிருந்து, மானாம்பள்ளி பவர் ஹவுஸ் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கு, 310 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 72 அடியில், நேற்று காலை, 27.07 அடியாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X