அழகிய ஆரம்பம்...
அம்மா தமிழ்; அப்பா மலையாளம். நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே கோவை. இளங்கலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி முடித்து பெங்களூருவில் ஆசிரியையாக வேலை பார்த்தேன்.
ஆசிரியை டூ சினிமா... எப்படி
தோழியை பார்க்க சென்னை வந்தேன். அப்போது 'மேகஸின்' சூட். அவங்க மாடல் என்பதால் என்கிட்டேயும் கேட்டாங்க. அப்படிதான் மாடலிங் உள்ளே வந்தேன். ஆசிரியை பணியை விட்டுட்டு வந்தபோது அம்மாதான் சப்போர்ட் பண்ணாங்க. போக போக வெள்ளித்திரையில் வாய்ப்பு. முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே... தொடர்ந்து செந்துாரப்பூவே, இப்படி சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளேன்.
இன்ஸ்டாகிராம் இளவரசியாமே, நீங்கள்...
போன வருஷம் லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இருந்தேன். அப்போது, கிராமத்து பெண் போல போட்டோக்களை 'அப்லோட்' செய்தேன். அது, தினமும் புதுவித ரசிகர்களை அதிகமாக்கியது. இன்ஸ்டாகிராமில் இத்தனை பேரை ஈர்ப்பேன் என நினைக்கவில்லை. தற்போது 10 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர் என்பது மகிழ்ச்சி.
'குக் வித் கோமாளி' க்கு முன், பின்
முதலில் வெள்ளித்திரை, சமூக வலைதளங்களில் வந்திருந்தாலும், குக் வித் கோமாளிக்கு பின்பே அதிகளவில் என்னை தெரிந்துள்ளனர். இளம் தலைமுறையினருக்கே தெரிந்த தர்ஷா... இந்த நிகழ்ச்சிக்கு பின் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்தாள். சாலை, சிக்னல் என எங்கு சென்றாலும் உடனே கண்டுபிடித்து 'ஹாய்' என்கின்றனர்.
சமூக சேவையில் ஈடுபடுகிறீர்களாமே
ஐயோ பாவம் என்று கடக்க முடியவில்லை. போன லாக்டவுன் போல இன்றி, இம்முறை சாலையோரம் பலர் உணவின்றி கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவ பசுமை இயக்கத்தில் சேர்ந்து மீனவ குடும்பம், ஏழை எளியோருக்கு உதவுகிறேன்.
ருத்ர தாண்டவம் டப்பிங் முடிந்ததா...
ஆம். என்னோட முதல் படம். டப்பிங் முடிந்தது. பாடல்கள் மட்டுமே இருக்கு. விரைவில் வெளிவரும்.
பெண்களுக்கு ஏதாவது...
விமர்சனங்களுக்கு அஞ்ச கூடாது. தைரியமாக இருக்கணும். எந்த துறையிலும் தனியாக சாதிக்கணும். தங்களை சிறிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ள கூடாது. பெண்கள் தற்போது பல துறைகளில் சாதிப்பது பெருமையாக இருக்கிறது. வேலைக்கு போற பெண்கள் அதிகமாகிட்டாங்க என்பதே வளர்ச்சிதானே.
ரோல் மாடல்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
‛பிட்னஸ் ' ரகசியம்
அப்படியெல்லாம் இல்லீங்க. கிரீம்ஸ் பெருசா யூஸ் பண்றதில்ல. இயற்கை அழகுதான். பெண்களுக்கு இயற்கையான முகம்தானே அழகு. சாப்பாட்டுல கொஞ்சம் கண்ட்ரோலா இருப்பேன். அவ்வளவுதான்.
இன்ஸ்டாகிராம் முகவரி: Dharsha
-சம்யு