பொது செய்தி

தமிழ்நாடு

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலா? பாதுகாக்க அழைக்கிறது ஐ.சி.சி.,

Added : ஜூன் 12, 2021
Share
Advertisement
கோவை:பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, புகார் அளிக்க சட்டம் இருப்பதால், பெண்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி, புகார் பெற்று விசாரிக்க தனியாக குழு அமைக்க சட்டத்தில் சொல்லப்பட்டாலும், அதை யாரும் முறையாக பின்பற்றுவதில்லை.இதனால், பாலியல்
 பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலா? பாதுகாக்க அழைக்கிறது ஐ.சி.சி.,

கோவை:பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, புகார் அளிக்க சட்டம் இருப்பதால், பெண்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகிறது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி, புகார் பெற்று விசாரிக்க தனியாக குழு அமைக்க சட்டத்தில் சொல்லப்பட்டாலும், அதை யாரும் முறையாக பின்பற்றுவதில்லை.இதனால், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகிறது. இச்சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே, பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் அதிகரிக்க காரணமாகிறது.சமீபகாலமாக பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இச்சட்டம் குறித்து, கோவை வக்கீல் சண்முகம் விளக்குகிறார்:பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான, பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் விசாகா கமிட்டி பரிந்துரைப்படி கொண்டு வரப்பட்டது. அதன்படி, அனைத்து விதமான பணியிடங்களிலும், ஐ.சி.சி., எனப்படும் உள்புகார் குழு(இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி) அமைக்க உத்தரவிடப்பட்டது.பாதிக்கப்பட்ட பெண், சம்பவம் நடந்த நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள், சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களுடன் இக்குழுவில், புகார் அளிக்க வேண்டும்.புகாரை பெற்றுக்கொண்ட குழுவினர், ஏழு நாட்களில், குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு புகார் குறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும்.குற்றம் சாட்டப்பட்ட நபர், 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகு, இரு தரப்பினரிடம், 90 நாட்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.குழுவின் விசாரணை முடிவில், புகாருக்கு உள்ளான நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை பணி நீக்கம் செய்தல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈடு அளித்தல், பதவி உயர்வு ரத்து, ஊதிய உயர்வு நிறுத்தி வைத்தல், எழுத்து பூர்வ மன்னிப்பு கடிதம் கோருதல், போன்ற தண்டனை அளிக்கலாம். மகளிர் போலீசில் புகார் அளிக்கவும் பரிந்துரைக்கலாம்.பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளிக்க விரும்பினால், அதற்கு நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். உள்புகார் குழு அமைக்கப்பட்டுள்ள விவரம், அதன் உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை அறிவிப்பு பலகையில், நிரந்தரமாக ஒட்ட வேண்டும்.இந்த விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.பள்ளி, கல்லுாரிகள், பல்கலைக்கழகம், அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களில், இச்சட்டத்தின் படி உள்புகார் குழு அமைத்தால், மாணவியர் மற்றும் பெண்களுக்கு எதிரான, பாலியல் துன்புறுத்தலை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு, வக்கீல் சண்முகம் கூறினார்.வெபினார் கருத்தரங்குபணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டம் குறித்த, வெபினார் கருத்தரங்கு நேற்று காலை நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கலாவதி, வக்கீல் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். கூகுள் மீட் வாயிலாக நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர், https://meet.google.com/eqr-vwfr-jzp என்ற இணைப்பை பயன்படுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X