பொது செய்தி

இந்தியா

100 ரூபாயை தாண்டியது பெட்ரோல், டீசல் விலை!

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 12, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
புதுடில்லி:ராஜஸ்தானில், லிட்டர் டீசல் விலை, 100 ரூபாயை தாண்டியது. நாட்டிலேயே, ஏழாவது மாநிலமாக கர்நாடகாவிலும் பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டி விட்டது.பெட்ரோல் விலை லிட்டருக்கு, 27 காசுகளும்; டீசல் விலை, 23 காசுகளும், எண்ணெய் நிறுவனங்களால் நேற்று உயர்த்தப்பட்டன.மே மாதம், 4ம் தேதியில் இருந்து, பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை நோக்கி நகர்ந்தது. டில்லியில், பெட்ரோல், 96 ரூபாய், 12
 100 ரூபாயை, தாண்டியது, பெட்ரோல், டீசல், விலை!

புதுடில்லி:ராஜஸ்தானில், லிட்டர் டீசல் விலை, 100 ரூபாயை தாண்டியது. நாட்டிலேயே, ஏழாவது மாநிலமாக கர்நாடகாவிலும் பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டி விட்டது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு, 27 காசுகளும்; டீசல் விலை, 23 காசுகளும், எண்ணெய்
நிறுவனங்களால் நேற்று உயர்த்தப்பட்டன.மே மாதம், 4ம் தேதியில் இருந்து, பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை நோக்கி நகர்ந்தது. டில்லியில், பெட்ரோல், 96 ரூபாய், 12 காசுகளுக்கும்; டீசல், 86 ரூபாய், 98 காசுகளுக்கும் விற்கப்படுகின்றன.


விலை வேறுபடும்

மாநில வரி மற்றும் போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றால், மாநிலத்துக்கு மாநிலம்,
நகரத்துக்கு நகரம் எரிபொருள் விற்பனை விலை வேறுபடும்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக் ஆகியவற்றில், லிட்டர் பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டியிருந்தது.தற்போது, ஏழாவது மாநிலமாக கர்நாடகாவிலும், பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டி விட்டது.

இம்மாநிலத்தில், பீதர், பெல்லாரி, கொப்பால், தாவணகரே, ஷிவமொகா மற்றும் சிக்கமகளூரு ஆகிய நகரங்களில், பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டிவிட்டது.மாநிலத்தின்
தலைநகரான, பெங்களூரில் நேற்று, லிட்டர் பெட்ரோல், 99 ரூபாய், 39 காசுகளாகவும்; டீசல், 92 ரூபாய், 27 காசுகளாகவும் இருந்தன.


அதிக வரி

நாட்டிலேயே முதன்முதலாக, ராஜஸ்தான் மாநிலத்தில், அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை அருகேயுள்ள ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், பிப்ரவரி மாதமே பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டியது. நேற்று டீசல் விலையும், 100 ரூபாயை தொட்டது. அங்கு பெட்ரோல்
லிட்டர், 107 ரூபாய், 22 காசு; பிரீமியம் பெட்ரோல், 110 ரூபாய், 50 காசு; டீசல், 100 ரூபாய், ஐந்து காசு; பிரீமியம் வகை, 103 ரூபாய், 72 காசுக்கு விற்கப்பட்டன.இந்தியாவிலேயே எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் மாநிலம் என்பதால், ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்.
மஹாராஷ்டிரா மாநில தலைநகர், மும்பையில் நேற்று பெட்ரோல், 102 ரூபாய், 30 காசுகளுக்கும்; டீசல், 94 ரூபாய் 39 காசுகளுக்கும் விற்கப்பட்டன.


நிர்ணயம்

லிட்டர் பெட்ரோல் விலை நேற்று, லே நகரில், 101 ரூபாய், 73 காசுகள்; ஸ்ரீநகரில், 99 ரூபாய், 27 காசுகள்; ஐதராபாதில், 99 ரூபாய், 96 காசுகளாக இருந்தன.மே மாதம், 4ம் தேதியில் இருந்து நேற்று வரை, 23 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இதனால், பெட்ரோல், 5 ரூபாய், 72 காசுகளும்; டீசல், 6 ரூபாய், 25 காசுகளும் விலை உயர்ந்துள்ளன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலர் மதிப்புக்கு ஏற்றவாறு, எண்ணெய் நிறுவனங்கள்
எரிபொருள் விலையை நிர்ணயம்செய்கின்றன.



சென்னையில் என்ன விலை?

சென்னையில் நேற்று முன்தினம், லிட்டர் பெட்ரோல், முதல் முறையாக, 97 ரூபாயை தாண்டி, 97.19 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் விலையும் எப்போதும் இல்லாத வகையில், லிட்டர், 91.42 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று பெட்ரோல் லிட்டருக்கு, 24 காசு உயர்ந்து, 97.43 ரூபாய் என்ற, புதிய உச்சத்தை எட்டியது. டீசல் விலையும் லிட்டருக்கு, 22 காசு அதிகரித்து, முதல் முறையாக, 91.64 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
15-ஜூன்-202122:20:51 IST Report Abuse
K.n. Dhasarathan மங் கி பத் தில் உபதேசம் செய்யும் பிரதமருக்கு பெட்ரோல் விலை பற்றி கவலை இல்லை, அவர்தான் யாரிடமும் கலந்து ஆலோசிப்பது கிடையாதே, தான் ஒருவர் பேசணும் மற்றவர் எல்லோரும் கேட்கணும், ஜனநாயகத்தில் சர்வாதிகாரி, ஜாதிக்கு ஏற்ற மூடிபோல பெட்ரோல் மந்திரி, அவர் வாயை திறந்தாலே பெரும் மகாராஜா போல பேசுவார், நிதி அமைச்சரோ பெட்ரோல் விலை குறைய வாய்ப்பே இல்லை என்பார், ஆனால் அதநீ, அம்பானி களுக்கு வரி சலுகை பல ஆயிரம் கோடி , கடன் தள்ளுபடி பல ஆயிரம் கோடி மட்டும் எப்படி கிடைக்கிறது ? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூன்-202106:56:53 IST Report Abuse
g.s,rajan ஏன் இருநூறு ரூபாய் வரைக்கும் ஏத்தி விட்டுடுங்க .அடிக்கடி விலையை நினைச்ச நினைச்சு ஏத்தி மக்களை சித்தரவதை செய்யறீங்க ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-202119:03:28 IST Report Abuse
Pugazh V கோவகட்19 ஐ விட பெரிய பேரிடர் பெட்ரோல் டீசல் விலையேற்றம் தான். பெட்ரோலியத் துறை அமைச்சர் பாவம். மன்மோகன் சிங்கை விடப் பெரிய மௌனசாமியார் ஆக்கி விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X