இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 போலீசார் உட்பட நான்கு பேர் பலிஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தின் ஆரம்போரா பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 2
today, crime, round up, இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 போலீசார் உட்பட நான்கு பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தின் ஆரம்போரா பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர். 2 போலீசார் காயமடைந்தனர்.மேலும் 2 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என்ற போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.


latest tamil news
சோக்சிக்கு 'ஜாமின்' மறுப்பு

புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான மெஹுல் சோக்சி, 62, ஆன்டிகுவா நாட்டில் தங்கியிருந்தார். சர்வதேச போலீசார் தேடுவதை அறிந்து, சட்டவிரோதமாக டொமினிக்கா நாட்டிற்குள் குடியேறினார். இதற்காக கைதான அவரது ஜாமின் மனுவை, டொமினிக்கா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.

நிலச்சரிவு: 4 குழந்தைகள் பலி

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரமின் ஐஸ்வால் மாவட்டம் துவாம்புய் கிராமத்தில், நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில், வீட்டின் சுவர் இடிந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 16 வயது இரட்டை சகோதரிகள் உட்பட நான்கு குழந்தைகள் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்தனர்

மின்னல் தாக்கி யானை பலி

கோர்பா: சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டம் பிரதாப்பூர் வன எல்லைக்குட்பட்ட தர்ஹோரா கிராமம் அருகே, ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது குறித்து, பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பரிசோதனையில், யானை மின்னல் தாக்கி இறந்தது கண்டறியப்பட்டது.


தமிழக நிகழ்வுகள்


latest tamil news


பாலியல் வழக்கில் சிக்கிய 'ஜூடோ மாஸ்டர்' பயிற்சி மையத்தில் கணினி பறிமுதல்

சென்னை : பாலியல் வழக்கில் சிக்கிய, 'ஜூடோ மாஸ்டர்' கெபிராஜ் வீடு மற்றும் அவர் நடத்தி வந்த பயிற்சி மையத்தில், கணினி உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.சென்னை, அண்ணா நகரை சேர்ந்தவர் கெபிராஜ், 41. இவர் தற்காப்பு கலையான, ஜூடோ மாஸ்டர். கெபிராஜ், தன்னிடம் பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவி ஒருவரை, போட்டியில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.விசாரணைசென்னைக்கு காரில் திரும்பும் போது, அந்த மாணவியை கட்டாயப்படுத்தி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அண்ணா நகர் மகளிர் போலீசார், கெபிராஜ் மீது வழக்குப்பதிந்து, மே 30ல் கைது செய்தனர். பின், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.தற்போது இந்த வழக்கை, இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள், கெபிராஜை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், கெபிராஜ், தன்னிடம் பயிற்சி பெற்ற மேலும் சில மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.இரண்டாவது நாளான நேற்று, கெபிராஜை போலீசார் அவர் நடத்தி வந்த பயிற்சி மையம் மற்றும் வீடு உட்பட மூன்று இடங்களுக்கு அழைத்து சென்றனர். அங்கு கெபிராஜ் பயன்படுத்தி வந்த கணினி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.இந்த பொருட்களை, சைபர் கிரைம் போலீசார் மற்றும் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த உள்ளனர். கெபிராஜின் நடவடிக்கைகள் குறித்து, அவரது மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.வாக்குமூலம்கெபிராஜ் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், அவர் எத்தனை ஆண்டுகளாக ஜூடோ பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் படித்த மாணவியர் பட்டியலையும், போலீசார் தயாரித்து வருகின்றனர்.கெபிராஜின் நட்பு வட்டத்தில், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர். முதலில், அவர்களின் பெயர்களை பயன்படுத்தி, கெபிராஜ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார்.எவ்வித குற்ற உணர்ச்சியும், அவரிடம் இல்லாதது, போலீசாரை ஆச்சரியப்பட செய்தது. பின், போலீஸ் பாணியில் விசாரித்த போது தான், 'தெரியாமல் தவறு செய்து விட்டேன்; மன்னித்து விடுங்கள்' என, கெஞ்சியுள்ளார். தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவியர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி, அவரது நண்பர்கள் மூன்று பேர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். அனைத்து விபரங்களையும் போலீசார், 'வீடியோ'வில் பதிவு செய்துள்ளனர்.

கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது

பல்லடம்:வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.பல்லடம், மாணிக்காபுரம் ரோடு கருப்பண்ணசாமி நகரை சேர்ந்தவர் சக்திவேல், 21; பனியன் தொழிலாளி. தனது வீட்டுக்கு பின்புறமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். பல்லடம் போலீசார், 500 கிராம் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.இதேபோல், 'மாணிக்காபுரம் ரோட்டில் வசிப்பவர் பெருமாள், 42; மளிகை வியாபாரி. வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த, 2 லிட்டர் சாராயம், 2 லி., ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்த பல்லடம் போலீசார், பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காங்., கட்சியினர் 30 பேர் மீது வழக்கு

நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்., கட்சியினர் 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். நெல்லிக்குப்பத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., கட்சி சார்பில் கடலுார் மத்திய மாவட்ட தலைவர் திலகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்., மத்திய மாவட்ட தலைவர் திலகர் உட்பட 30 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் இறந்த 3 பெண்கள்

மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அருகே விபத்தில் இறந்த கர்ப்பிணி உட்பட மூவர் குடும்பங்களுக்கு தாசில்தார் நிவாரண தொகை வழங்கினார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டை சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலட்சுமிக்கு, 24, 2 நாட்களுக்கு முன், பிரசவலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அப்போது வழியில் ஆலத்துாரில் ஏற்பட்ட விபத்தில் ஜெயலட்சுமி, அவர் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோர் இறந்தனர். இந்த தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்த கர்ப்பிணி ஜெயலட்சுமிக்கு 5 லட்சமும், செல்வி, அம்பிகா ஆகியோருக்கு தலா 3 லட்சம் தருவதாக அறிவித்தார். இதற்கான காசோலயை சங்கராபுரம் தாசில்தார் சையத் காதர், விபத்தில் இறந்த குடும்பத்தில் உள்ள ஜெயலட்சுமியின் கணவர் கண்ணன், அம்பிகா கணவர் செந்தில், செல்வியின் கணவர் அரசு ஆகியோரிடம் வழங்கினார். வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை, வி.ஏ.ஓ பாலசுப்பிரமணியன், கிராம உதவியாளர் கலா ஆகியோர் உடனிருந்தனர்.


சின்னசேலம் பகுதியில் 2 ஜவுளி கடைகளுக்கு சீல்

சின்னசேலம்-சின்னசேலம் நகரப்பகுதியில் கொரோனா ஊரடங்கை மீறி விற்பனையில் ஈடுபட்ட, இரண்டு ஜவுளி கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.சின்னசேலம் தாசில்தார் விஜயபிரபாகரன் தலைமையிலான வருவாய்த்துறையினர், நகரப்பகுதியில் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடைவீதியில் உள்ள 2 ஜவுளிக் கடைகளில், அதன் உரிமையாளர்கள் கதவை திறந்து வியாபாரம் செய்தனர். கடையில் பொதுமக்கள் முககவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் துணிகள் வாங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து பொது மக்களை வெளியேற்றிய வருவாய்துறையினர் 2 ஜவுளிக் கடைகளுக்கும் எச்சரிக்கை விடுத்து 'சீல்' வைத்தனர்.

வாடகை கேட்ட தகராறில் கூலி தொழிலாளியை கொலை செய்தவர் கைது

கடலுார்-வீட்டு வாடகை கேட்டு தகராறு செய்து கூலித் தொழிலாளியை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் புதுப்பாளையம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 35; கூலித் தொழிலாளி. இவர், ரேவதி என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அதே பகுதியைச்சேர்ந்தவர் ராஜேஷ், 40; இவர் நேற்று காலை ராஜாவிடம் சென்று வீட்டு உரிமையாளர் வாடகை வாங்கி வர சொன்னதாக கூறியுள்ளார்.வாடகை தர மறுத்த ராஜா, வீட்டு உரிமையாளரிடம் தானே கொடுத்து விடுவதாக தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேஷ், உருட்டு கட்டையால் ராஜாவின் தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த ராஜா, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.கடலுார் புதுநகர் போலீசார் கொலை வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.


சூலூரில் திடீர் தீவிபத்து: வீடு; கடைகள் கருகின

சூலூர்:சூலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கிழக்கு வீதியில், சண்முகம், தண்டபாணி, ஐயப்பன் ஆகியோருக்கு சொந்தமான, மூன்று கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இதன் பின்புறம் இரு வீடுகள் உள்ளன.அந்த வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் மூர்த்தி, 45, தச்சு தொழிலாளி. நேற்று, முன்தினம் இரவு 11:00 மணிக்கு, முன்புறம் உள்ள மளிகை கடையின் உள்ளே தீப்பிடித்து, புகை வெளியேறுவதை கண்டு, அக்கம்பக்கத்தினரை அழைத்தார்.
அதற்குள் தீ மற்ற இரு கடைகள் மற்றும் இரு வீடுகளுக்கு பரவியது. தகவல் அறிந்த பீளமேடு மற்றும் சூலூர் விமானப்படைத்தள தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள், கடைகள் மற்றும் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமாகின. எம்.எல்.ஏ., கந்தசாமி, தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் மன்னவன் ஆகியோர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.சேவா பாரதி சார்பில் உதவிதீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூர்த்தி குடும்பத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்.- சேவா பாரதி மற்றும் பா.ஜ., சார்பில், அதன் நிர்வாகிகள் ரூ.17 ஆயிரம் மற்றும் ஆடைகளை வழங்கினர்.

சாலை விபத்தில் 2 பேர் பலி

திருப்புவனம் : திருப்புவனம் அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதியதில் கட்டட பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.பொட்டப்பாளையத்தை சேர்ந்த குமார் மகன் பிரவீன்குமார் 19, கட்டமன் கோட்டையைச் சேர்ந்த நமச்சிவாயம் மகன் சதீஷ்குமார் 20, இருவரும் மதுரையில் கட்டடப்பணி செய்தனர்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் பொட்டப்பாளையம் ரோட்டில் செல்லும்போது புலியூர்அருகே சரக்கு வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்தார்.மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரவீன்குமார் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தீயிட்டு வாலிபர் தற்கொலை

கீழச்சிவல்பட்டி : திருப்புத்துார் அருகே சந்திரம்பட்டி கண்மாயில் தீயிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை திருமயம் நல்லுாரைச் சேர்ந்த அடைக்கப்பன் மகன் கருப்பையா 35.இவர் கடந்த இரண்டு மாதங்களாக கீழச்சிவல்பட்டி அருகே கல்லங்குத்து கிராமத்தில் மனைவி கவிதாவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று சந்திரம்பட்டி சிறுகுடி கண்மாயில் எரிந்த நிலையில் கருப்பையாவின் உடல் கிடந்தது. கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரிக்கையில் குடும்பப் பிரச்னையில் மன வருத்தத்தில் கருப்பையா பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இறந்தது தெரியவந்தது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X